முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை 20 ஆக குறைக்க மகராஷ்டிர அரசு முடிவு

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      இந்தியா
Maharashtra 2024-10-25

Source: provided

மும்பை :  குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை 20 ஆக குறைக்க மகராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது.

மகராஷ்டிரா மாநிலத்தில்  தேர்ச்சிபெறுவோர் விகிதம் குறைந்தவண்ணம் உள்ளது. பரீட்சையில் தோல்வியடைந்த மாணவர்கள் 10-ம் வகுப்புக்கு பிறகு  கல்வியை கைவிடுகிறனர். எனவே மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது. 

இதை சரிசெய்யும் வகையில் 10-ம் வகுப்பு கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண்களை  35-ல் இருந்து 20- ஆக குறைக்க மகராஷ்டிர பள்ளிக்கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. 

ஆனாலும் இதன்படி அந்த மாணவர்களால் தொடர்ந்து கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த உயர் படிப்புகளைப் படிக்க முடியாது. கலை, மானுடவியல் சார்ந்த படிப்புகளையே உயர்கல்வியில் அவர்கள் தேர்வு செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

புதிய பாடத்திட்டம்  அமலுக்கு வரும் போது இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து