முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டானா புயலுக்கு மேற்குவங்கத்தில் ஒருவர் பலி

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      இந்தியா
mamtha 2023-06-01

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் டானா புயலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்தார்

வங்கக்கடலில் உருவான டானா புயல் அக்.24 நள்ளிரவில் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையைக் கடந்தது. இதனால் ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இவ்விரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

டானா முன்னெச்சரிக்கையாக மேற்கு வங்கத்தில் தெற்கு பகுதி மாவட்டங்களில் சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதுதொடர்பாக முதல்வர் மமதா கூறியது, மாநிலச் செயலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணப் பொருள்கள் சென்றடைவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இயற்கைப் பேரிடரில் ஒருவர் மட்டும் உயிரிழந்ததாக அவர் கூறினார். உயிரிழந்தவர் தனது வீட்டில் கேபிள் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது இறந்தார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மாநில அரசு இறந்தவரின் குடும்பத்திற்கு உதவத் தயாராக உள்ளதாகவும் பானர்ஜி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து