முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு கவர்னர் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      இந்தியா
Kashmir 2024-10-25

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் 2 போர்ட்டர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அஞ்சலி செலுத்தினார்.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தளமான குல்மார்க்கில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போட்டா பத்ரி என்ற இடத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ராணுவ வீரர்கள் இருவர் மற்றம் ராணுவ போர்ட்டர்கள் இருவர் என 4 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் மாலை (அக்.24) இந்த தாக்குதல் நடந்தது.

உயிரிழந்த ராணுவ வீரர்கள் கைசர் அகமது, ஜீவன் சிங் என்பதும், போர்ட்டர்கள் முஷ்டாக் அகமது சவுத்ரி, ஜாஹூர் அகமது மிர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களின் உடல்களுக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "அக்டோபர் 24, 2024 அன்று போட்டா பத்ரி என்ற இடத்தில் நாட்டிற்கான சேவையில் மிக உயர்ந்த தியாகம் செய்த துணிச்சலான வீரர்கள் மற்றும் பாதுகாப்பு போர்ட்டர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்களின் தன்னலமற்ற சேவையையும் அவர்களின் உயர்ந்த தியாகத்தையும் இந்தியா ஒருபோதும் மறக்காது. உயிரிழந்த குடும்பத்தினருடன் நாங்கள் ஆதரவாக நிற்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து