முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹரியாணா சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      இந்தியா
Haryana 2024-10-25

Source: provided

சண்டிகர் : ஹரியாணாவில் முதல்வர் சைனி உள்பட 14 எம்எல்ஏக்கள் நேற்று 15-வது மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். வினேஷ் போகட் உள்ளிட்ட பெண் எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக அவைதலைவராகவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரகுவீர் சிங் காடியன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அக்டோபர் 17-ஆம் தேதி பஞ்ச்குலாவில் ஹரியாணா முதல்வராகப் பதவியேற்ற சைனி, தற்காலிக அவைத் தலைவரால் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்ட முதல் நபர் ஆவார்.

சைனிக்குப் பிறகு அம்பாலா கான்ட் தொகுதியிலிருந்து 7 முறை எம்எல்ஏவாக இடருந்த அனில் விஜ், இஸ்ரானா எம்எல்ஏ கிரிஷன் லால் பன்வார், பாட்ஷாபூர் எம்ல்ஏ ராவ் நபீர் சிங், பானிபட் எம்எலிஏ மஹிபால் தண்டா, பரிதாபாத் சட்டமன்ற உறுப்பினர் விபுல் கோயல், கோஹானா எம்எல்ஏ அரவிந்த் சர்மா மற்றும் ராடௌர் எம்எல்ஏ ஷியாம் சிங் ராணா ஆகியோருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சர்களில் பர்வாலா எம்எல்ஏ ரன்பீர் கங்வா, நர்வானா எம்எல்ஏ கிரிஷன் குமார் பேடி, தோஷம் எம்எல்ஏ ஸ்ருதி சௌத்ரி, அடேலி எம்எல்ஏ ஆர்த்தி சிங் ராவ, டைகான் எம்எல்ஏ ராஜஷ் மற்றும் பல்வால் சட்டமன்ற உறுப்பினர் கௌரவ் கௌதம் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேலும் மல்யுத்த வீரர் வினேஷ் போகட் உள்ளிட்ட பெண் எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்ற ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றிபெற்றுத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து