முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      இந்தியா
Bengalur 2024-10-25

Source: provided

பெங்களூரு : பெங்களூரு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் மேலும் ஒருவரின் உடல் வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூரூவில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையையடுத்து முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கட்டுமானப் பணியிலிருந்த 7 அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்துவிழுந்தது. கன மழையால் ஹென்னூர், பாபுசாபாளையா பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதில் பணியாற்றி வந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், கட்டிட உரிமையாளர் மற்றும் அவரது மகன் மோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 4 மாடிகள் கட்ட அனுமதி பெற்று 7 மாடிகள் கட்டியதாக உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேசிய பேரழிவு மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், நேற்று காலை இடிபாடுகளில் மேலும் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் ஏழுமலை என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக மூத்த காவல் அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து