முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேவிட் வார்னர் மீதான வாழ்நாள் தடை நீக்கம் : ஆஸி. கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      விளையாட்டு
Warner 2023-09-10

Source: provided

மெல்போர்ன் : டேவிட் வார்னர் கேப்டனாக செயல்பட விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பந்தை சேதப்படுத்திய....

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். இவர் ஐ.பி.எல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தொடர்ந்து மற்ற லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு, ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டதோடு, எந்த அணிக்கும், கேப்டனாக விளையாட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.

கணிசமான மாற்றம்... 

இந்நிலையில், தற்போது கேப்டனாக டேவிட் வார்னர் மீது விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடை நீக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தடை விதிக்கப்பட்டதிலிருந்து வார்னரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. அவர் கணிசமான மாற்றத்தை எதிர்கொண்டதாக தெரிகிறது. உதாரணமாக அவர் போட்டிகளின்போது ஸ்லெட்ஜ் செய்யவோ அல்லது எதிர் அணியைத் தூண்டிவிடவோ முயற்சிக்கவில்லை. வார்னர் 2018-ல் நடந்ததைப் போன்ற எந்த நடத்தையிலும் ஈடுபட மாட்டார் என்பதில் மறுஆய்வுக் குழு திருப்தி அடைந்துள்ளது. இதன் விளைவாக அவர் இனி கேப்டன் பதவி பெற தகுதி பெற்றுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமாக உள்ளோம்...

இந்நிலையில் அந்த அவசியம் உருவாகவில்லை என்று அவருக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிரடியான பதிலை அளித்துள்ளார். மேலும் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவதை வர்ணனையாளராக மட்டும் பாருங்கள் என்றும் அவருக்கு கம்மின்ஸ் கிண்டலான பதிலை கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "வார்னரும் நாங்களும் ஆர்வமாக உள்ளோம். நாங்கள் அதை மிகவும் தீவிரமாக பேசி தொடர்பில் உள்ளோம். அவரிடம் சில நாட்கள் முன்பாக நான் பேசினேன். அப்போது இந்த கோரிக்கையை அவர் என்னிடம் வைத்தாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை. 

மீண்டும் அணிக்குள்... 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவர் என்னிடம் கேட்டார். அப்போது சிட்னி தண்டர் அணிக்காக பிக்பேஷ் தொடரில் அசத்துவதற்கு வாழ்த்துகள் என்று அவரிடம் சொன்னேன். மேலும் உங்களுடைய வர்ணனையை கேட்க ஆர்வத்துடன் உள்ளதாகவும் வார்னரிடம் கூறினேன். மீண்டும் அணிக்குள் அவர் வருவதற்கு கவலைப்பட மாட்டார் என்று நினைக்கிறேன். வார்னரை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அவர் ஓய்வு பெற்று விட்டார். சாரி நண்பா" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து