முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஸ் ஃபிடே லைவ் ரேட்டிங்: அர்ஜூன் எரிகைசி சாதனை

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      விளையாட்டு
Arjun-Erikaisi 2024-10-25

Source: provided

மும்பை : இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி ஃபிடே லைவ் ரேட்டிங்கில் 2,800 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.இந்த சாதனையை நிகழ்த்தும் 2ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

15 பேர் மட்டுமே.... 

இதுவரை உலக அளவில் 15 பேர் மட்டுமே இந்தப் புள்ளிகளை கடந்திருந்தார்கள். தற்போது, 16ஆவது வீரராக அர்ஜூன் எரிகைசி இணைந்துள்ளார். இதற்கு தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன்மூலம் உலக செஸ் தரவரிசையில் 3-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளார். முதலிடத்தில் மாக்னஸ் கார்ல்சன் 2,831 புள்ளிகளுடன் இருக்கிறார். 2ஆம் இடத்தில் ஃபபியானோ கருணா 2,805.2 புள்ளிகளுடன் இருக்கிறார். 

6 போட்டிகளில்... 

கடந்த வாரம் நடைபெற்ற டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றாலும் இந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை. கிளாசிக்கல் கேமில் டிரா ஆனதால் தவறவிட்டார். 45ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் அர்ஜூன் எரிகைசி முதல் 6 போட்டிகளில் 6-0 என வென்றதால் இந்தியா முதலிடத்தை தக்க வைக்க மிகவும் உதவியது குறிப்பிடத்தக்கது. செஸ் உலகில் பலரும் அர்ஜூனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து