எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டாமினிக், மைக்கேல் பராட் மற்றும் ஜீனெட் எப்ஸ், ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் கிரெபென்கின் ஆகிய 4 விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது.
இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இந்த 4 பேரும் தங்கள் ஆய்வுப் பணிகளை முடித்து விட்டு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் போயிங் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விண்கலம் விண்வெளி வீரர்களின்றி கடந்த செப்டம்பர் மாதம் பூமிக்கு வந்தடைந்தது.
அதனை தொடர்ந்து மில்டன் புயல் காரணமாக மீண்டும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் இந்தியா வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு 8 நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்றிருந்தனர்.
அவர்களும் பூமிக்கு திரும்ப முடியாமல் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அவர்களின் ஆய்வுப் பணி 8 நாட்களில் இருந்து 8 மாதங்களாக நீட்டிக்கப்பட்டது. மேலும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சமீபத்தில் 2 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைத்தது.
இந்த சூழலில் மார்ச் மாதம் விண்வெளிக்கு சென்ற 4 விண்வெளி வீரர்களும் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர். தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் 4 அமெரிக்கர்கள் மற்றும் 3 ரஷ்யர்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விண்வெளியில் சுமார் ஐந்து மாதங்கள் தங்கியிருக்கும் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்காவிலும், உலகெங்கிலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுபவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பகிரப்பட்ட வீடியோவில் பேசிய சுனிதா வில்லியம்ஸ், ஐ.எஸ்.எஸ்.சிலிருந்து வாழ்த்துக்கள். இன்று வெள்ளை மாளிகையிலும் உலகெங்கிலும் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் பூமியிலிருந்து 260 மைல்களுக்கு அப்பால் தீபாவளியைக் கொண்டாடும் தனித்துவமான வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது... தீபாவளி மற்றும் பிற இந்தியப் பண்டிகைகளைப் பற்றி எங்களுக்குக் கற்பிப்பதன் மூலம் எனது தந்தை தனது கலாச்சார வேர்களை பகிர்ந்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தீபாவளி பண்டிகையில் பங்கேற்றதற்காகவும், சமூகத்தின் பங்களிப்பை அங்கீகரித்ததற்காகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கும் வில்லியம்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
வர்த்தகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 4 weeks ago |
-
முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி - குரு பூஜை விழா: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் மரியாதை: அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
29 Oct 2024சென்னை : முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குரு பூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் இன்று
-
கங்குவா இசை வெளியீட்டு விழா
29 Oct 2024சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க, இப்படத்திற்கு தேவிஸ்ரீபிராசாத் இசையமைத்துள்ளார்.
-
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை
29 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு இன்று அரைநாள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வரும் 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
29 Oct 2024சென்னை : தமிழகத்தில் வரும் 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது: தமிழகத்தில் வாக்காளர்கள் மொத்தம் 6.27 கோடி பேர் : திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்
29 Oct 2024சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
-
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித்தேர்வை விரைவில் நடத்துகிறது ஆசிரியர் தேர்வு வாரியம்
29 Oct 2024சென்னை : கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித் தேர்வை விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த இருக்கிறது.
-
பிரதமர் மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை
29 Oct 2024கீவ் : பிரதமர் மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2024.
29 Oct 2024 -
குழப்பத்தில் இருக்கிறார் நடிகர் விஜய்: மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி
29 Oct 2024சென்னை : நடிகர் விஜய் தெளிவான பாதையைத் தேர்வு செய்யவோ, பயணிக்கவோ விரும்பவில்லை. அவர் குழப்பத்தில் உள்ளார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: வரிசையில் நின்று முன்கூட்டியே வாக்களித்தார் ஜோ பைடன்
29 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலாவேர் மாநிலத்தில் அவரது வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வ
-
தீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ சேவை நீட்டிப்பு
29 Oct 2024சென்னை : தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிகாக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
29 Oct 2024புதுடெல்லி : ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகமை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு 30 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
-
ரூ. 426 கோடி செலவில் கட்டப்பட்ட 3,268 குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
29 Oct 2024சென்னை : சென்னை, ஈரோடு, கோவை, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சையில் ரூ.
-
நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சுவாமி - அம்பாளுக்கு திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
29 Oct 2024நெல்லை : நெல்லை நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று சுவாமி- அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
-
51,000 பேருக்கு பணி நியமன கடிதம் வழங்கிய பிரதமர் மோடி
29 Oct 2024புதுடெல்லி : மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நேற்று பணி நியமன கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார்
-
2026-ல் நம் இலக்கை அடைவோம்: த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
29 Oct 2024சென்னை : மாநாட்டை வெற்றி பெற செய்த தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த த.வெ.க.
-
அமைச்சர் தலைமையில் நல வாரிய கூட்டம்: பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்க ஒப்புதல்
29 Oct 2024சென்னை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை மற்றும் ஈமசடங்கு உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
-
நாட்டில் வளர்ச்சிப்பணிகள் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது : பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
29 Oct 2024புதுடெல்லி : ஒவ்வொரு இளைஞருக்கும் வாய்ப்பளிக்கும் அமைப்பை அரசு உருவாக்குகிறது என்று தெரிவித்த பிரதமர் மோடி, வளர்ச்சிப் பணிகள் மக்களுக்கு வசதிகளை வழங்குவது மட்டுமல்லாமல்
-
சுவாமிமலையில் வரும் 1-ம் தேதி கந்தசஷ்டி விழா துவக்கம் : 7-ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது
29 Oct 2024சுவாமிமலை : முருகப்பெருமானின் 4-ம் படை வீடான சுவாமி மலையில் வரும் 1-ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்குகிறது. வரும் 7-ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
-
அயோத்தி கோவிலில் கடவுள் ராமர் தீபாவளி கொண்டாட உள்ளார்: பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி
29 Oct 2024புதுடெல்லி, அயோத்தி கோவிலில் கடவுள் ராமர் 500 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி கொண்டாட உள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. மாநாட்டில் அ.தி.மு.க.வை நடிகர் விஜய் விமர்சிக்காதது ஏன்? - எடப்பாடி பழனிசாமி பதில்
29 Oct 2024சென்னை : அ.தி.மு.க. சிறப்பாக செயல்பட்டிருப்பதால்தான் த.வெ.க. மாநாட்டில் நடிகர் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
உலக சிக்கன நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Oct 2024சென்னை : செலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம் என்று உலக சிக்கன நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்து
29 Oct 2024வாஷிங்டன் : சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் ஓட்டுப்பெட்டிக்கு தீ வைப்பு: நூற்றுக்கணக்கான வாக்கு சீட்டுகள் எரிந்து நாசம்
29 Oct 2024வாஷிங்டன் : அதிபர் தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியுள்ள அமெரிக்காவில், வாஷிங்டனில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பெட்டிக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை
-
வயநாடு மக்களின் மறுவாழ்வு பணிகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது: பிரியங்கா
29 Oct 2024வயநாடு : நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களின் மறுவாழ்வு பணிகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.