முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு மக்களின் மறுவாழ்வு பணிகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது: பிரியங்கா

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      இந்தியா
Priyanka 2024-10-29

Source: provided

வயநாடு : நிலச்சரிவால்  பாதிக்கப்பட்ட வயநாடு மக்களின் மறுவாழ்வு பணிகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

வயநாடு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 13-ம் தேதி நடக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதன் மூலம் அவர் முதல் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். 

அவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் உடன் சென்று கடந்த 23-ம்  தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். 

வயநாடு பாராளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதால், காங்கிரசார் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வயநாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் நேற்று முன்தினம் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வந்தடைந்தார். 

பின்னர் நீலகிரியில் இருந்து வயநாடு தொகுதி சென்ற பிரியங்கா காந்தி அங்கு ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார். இதனை தொடர்ந்து, நேற்று ஈங்கப்புழாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி கூறியதாவது, 

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மக்களின் மறுவாழ்வு பணிகளை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு புறக்கணிக்கிறது. மத்தியில் உள்ள மோடி அரசு எடுத்துள்ள நிலைப்பாடு, மக்கள் மற்றும் தேசத்தின் மீதான மரியாதையின்மையை காட்டுகிறது.

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அதன் கொள்கைகளில் இருந்து தெளிவாக தெரிகிறது. வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் பார்வையிட்ட பிரதமர் மோடி, அவர்களுக்கு அனைத்து வகையான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். 

ஆனால் பல மாதங்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து