எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இம்பால், மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகரித்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர அமித்ஷா தலைமையில் நேற்று 2-வது நாளாக உயர்மட்ட கூட்டம் நடந்தது. 3 முக்கிய வழக்குகள் என்.ஐ.ஏ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல்கள் ஏற்பட்டன. இது வன்முறையாக பரவியது. இந்த சம்பவத்தில், இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பல மாதங்களுக்கு பின்னர் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 6 பேர் பலியானார்கள். இதனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு இடங்களிலும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், முதல்-மந்திரி பைரன் சிங்கின் வீட்டை கும்பல் ஒன்று முற்றுகையிட முயற்சித்தது. அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர்.
இதனை தொடர்ந்து அவருடைய வீட்டை சுற்றி நேற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வீடுகளை முற்றுகையிட்டு, தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 23 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த சூழலில், அடுத்த உத்தரவு வரும் வரை இம்பால் மாவட்டம் முழுவதும் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக உடனடியாக, 2 நாட்களுக்கு இணையதளம் மற்றும் மொபைல் வழியேயான இணையதள சேவைகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளன.
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால், பல்வேறு இடங்களிலும் பதற்ற நிலை காணப்படுகிறது. ஸ்திரத்தன்மையற்ற சூழல் காணப்படும் நிலையில், மணிப்பூர் போலீசாரிடம் இருந்து 3 வழக்குகள் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதன்படி, 3 முக்கிய வழக்குகள் மீது என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொள்ளும்.
கடந்த 16-ந்தேதி அறிக்கை ஒன்றின் வழியே மத்திய உள்துறை அமைச்சகம் இதனை தெரிவித்தது. மணிப்பூரில் வன்முறை தொடர்ச்சியாக, மத்திய ஆயுத போலீஸ் படையை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். தேவைப்பட்டால் கூடுதல் கம்பெனி படைகள் செல்லும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்த 3 வழக்குகளில் ஒரு வழக்கின்படி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் குகி பயங்கரவாதிகளுக்கு இடையே ஜிரிபாம் பகுதியில் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 10 குகி பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதேபோன்று 6 பேர் கடத்தல் பற்றிய தனி வழக்கு ஒன்றும் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த 6 பேரும் கடத்தப்பட்ட பின்னர் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. வன்முறை பரவ முக்கிய காரணங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.
மணிப்பூர் வன்முறை பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிலையில், வன்முறை விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொள்ள அமித்ஷா தலைமையில் நேற்றும் உயர்மட்ட கூட்டம் ஒன்றை நடந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
4 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி முர்மு
17 Nov 2024சென்னை : 4 நாட்கள் அரசு முறை பயணமாக 27-ம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரெபதி முர்மு.
-
கர்நாடகாவில் சோகம்: நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் பலி
17 Nov 2024கர்நாடகா : கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்கும் தொகுதி? - வெளியான தகவலால் பரபரப்பு
17 Nov 2024சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்கும் தொகுதி குறித்து வெளியான தகவலால் த.வெ.க. தொண்டர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தென்காசி: திருமண விழாவில் மதுவிருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி படுகொலை
17 Nov 2024தென்காசி : தென்காசியில் திருமண விழாவையொட்டி நடந்த மதுவிருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய அணியில் சாய் சுதர்சன்
17 Nov 2024இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குவது அவசியம் : முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தல்
17 Nov 2024மும்பை : இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குவது அவசியம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
-
மணிப்பூரில் தொடரும் வன்முறை: பா.ஜ.க. அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற தேசிய மக்கள் கட்சி
17 Nov 2024இம்பால் : மணிப்பூர் வன்முறையை அடுத்து பா.ஜ.க. அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றது தேசிய மக்கள் கட்சி.
-
அமெரிக்காவில் அரசு வேலை குறைப்பு: புதிய நிர்வாகி விவேக் ராமசாமி தகவல்
17 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் அரசு வேலை பெருமளவில் குறைக்கப்படும் என, ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நிர்வாகி விவேக் ராமசாமி கூறியுள்ளார்.
-
அஸ்வினுக்கு எதிராக கவனமாக விளையாட ஸ்மித் எச்சரிக்கை
17 Nov 2024பெர்த் : அஸ்வினுக்கு எதிராக கவனமுடன் விளையாடுவது அவசியம் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சகோதரர் மறைவு
17 Nov 2024ஐதராபாத் : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் ராமமூர்த்தி நாயுடு [வயது 72] காலமானார்.
-
துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற தாயால் மேடையில் சிரிப்பலை
17 Nov 2024சென்னை : துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற திருமணவிழாவில் மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற தாயால் மேடையில் சிரிப்பலை எழுந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-11-2024.
18 Nov 2024 -
ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Nov 2024மும்பை : ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தியாகத்தின் உச்சம்: வ.உ. சிதம்பரனாருக்கு கமல்ஹாசன் புகழாரம்
18 Nov 2024சென்னை, தியாகத்தின் உச்சம் வ.உ. சிதம்பரனார் என்று அவரது நினைவு நாளில் மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
-
பெங்களூரு தலைமையகத்தை மாற்ற அமேசான் திடீர் முடிவு?
18 Nov 2024பெங்களூரு : உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறது.
-
வேத மந்திரங்கள் முழங்க பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலில் உற்சாக வரவேற்பு
18 Nov 2024ரியோ டி ஜெனீரோ, நைஜீரியாவில் ஆக்கப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகருக்கு நேற்று காலை சென்று சேர்ந்த
-
காற்று மாசு அதிகரிப்பால் வட மாநிலங்களில் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டுள்ளது: டெல்லி முதல்வர் அதிஷி தகவல்
18 Nov 2024புதுடெல்லி, காற்று மாசு அதிகரிப்பால் வட மாநிலங்களில் மருத்துவ அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அதிஷி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
-
ஈரான் உயர் தலைவரை ரகசியமாக தேர்வு செய்த அயத்துல்லா காமேனி
18 Nov 2024ஈரான் : ஈரான் உயர் தலைவரை அயத்துல்லா காமேனி ரகசியமாக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழலா? - வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம்
18 Nov 2024புதுக்கோட்டை : '2026ம் ஆண்டு வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
-
வாத்தியார் படத்தின் டீஸர் வெளியீடு
18 Nov 2024நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.
-
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட நபர்
18 Nov 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தீ பற்றிய அடுத்த வினாடியே சற்றும் யோசிக்காமல், யா
-
போக்குவரத்து நெரிசல் அதிரிப்பு எதிரொலி: சென்னையில் நூற்றுக்கணக்கான பஸ் நிறுத்தங்கள் இடம் மாற்றம்?
18 Nov 2024சென்னை. போக்குவரத்து நெரிசல் அதிரிப்பு காரணமாக சென்னையில் நூற்றுக்கணக்கான பஸ் நிறுத்தங்கள் இடம் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: பவுனுக்கு 480 ரூபாய் அதிகரிப்பு
18 Nov 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து நேற்று விற்பனையானது.