முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரத்தில் வரும் 29-ம் தேதி சமூகநீதி போராளிகள் மணி மண்டப திறப்பு விழா : ராமதாஸுக்கு அழைப்பு - அமைச்சர் பொன்முடி தகவல்

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      தமிழகம்
Ponmudi 2021 12 13

Source: provided

விழுப்புரம் : விழுப்புரத்தில் வரும் 29-ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும், 21 சமூகநீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழாவுக்கு தமிழக அரசு சார்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் சமூகநீதி போராளிகள் குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபத்தையும், முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமியின் நினைவு அரங்கத்தையும் வரும் 29-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 

மேலும் அனறைய தினம், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, விழுப்புரம் தெற்கு தி.மு.க. மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்  நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட  அமைச்சர் பொன்முடி, வரும்  29-ம் தேதி, விழுப்புரத்தில் நடைபெறும் ஏ. கோவிந்தசாமி நினைவரங்கம் மற்றும் 21 சமூகநீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழக அரசு சார்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் 21 சமூகநீதி போராளிகள் குடும்பத்துக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து