எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆடி வருகிறது. இதில் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கலந்து கொள்ளவில்லை. ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவுக்கு கடந்த 15-ந் தேதி ஆண் குழந்தை பிறந்ததால் அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு சென்ற இந்திய அணியினருடன் செல்லவில்லை. இதன் காரணமாக அவர் பெர்த் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
இந்நிலையில், ரோகித் சர்மா பார்டர்-கவாஸ்கர் தொடரில் பங்கேற்க தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவர் பெர்த்தில் இந்திய அணியினருடன் தற்போது இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது போட்டியில் அவர் களம் இறங்குவார் என தெரிகிறது.
_______________________________________-__________________________
சென்னை அணியில் அஸ்வின்
18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் (2025) நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் (முன்னணி வீரர்கள்) ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னணி வீரரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு வாங்கியது. அஸ்வின் 2008 முதல் 2015 வரை ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். தற்போது 9 வருடங்களுக்கு பின் மீண்டும் 'மண்ணின் மைந்தன்' அஸ்வின் சென்னை அணியில் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. இந்நிலையில், சென்னை அணியில் தோனி, ருதுராஜ் உடன் இணைந்து விளையாட காத்திருக்கிறேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, வாழ்க்கை ஒரு வட்டம் என சிலர் சொல்வார்கள். சென்னை அணிக்காக கடந்த 2008 முதல் 2015 வரை விளையாடியதுதான் எனது கிரிக்கெட் பயணத்திற்கு உதவியாக இருந்தது. 2011ல் என்னை ஏலத்தில் எடுக்க சென்னை போட்டி போட்டதுபோல தற்போதும் நிர்வாகம் செயல்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு சி.எஸ்.கே-வுக்கு விளையாடுவது பெருமையாக உள்ளது. தோனி மற்றும் ருதுராஜ் உடன் இணைந்து விளையாட காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
_______________________________________-__________________________
ரிஷப் தேர்வு குறித்து விளக்கம்
ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. டெல்லி அணி கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்டை விடுவித்தது. இதையடுத்து ஏலத்திற்கு வந்த ரிஷப் பண்டை லக்னோ அணி ரூ.27 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். இதையடுத்து லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.
இந்நிலையில், முதல் நாள் ஏலத்தில் ரிஷப் பண்டை வாங்கிய பின்னர் லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறியதாவது, ரிஷப் பண்டை தேர்வு செய்வது என்பது எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அவர் பட்டியலில் இருந்ததால் அவருக்காக கோடிக்கணக்கில் வைத்து இருந்தோம். அவரது தொகை ரூ.27 கோடி என்று சற்று உயர்ந்து விட்டது. நாங்கள் ரூ. 26 கோடி வரை திட்டமிட்டிருந்தோம். ஆனால் எங்களுக்கு அவர் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ரிஷப் பண்ட் சிறந்த வீரர் மற்றும் மேட்ச் வின்னர். அவர் லக்னோ அணியில் இடம் பெற்று இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
_______________________________________-__________________________
புவனேஷ்வர் ரூ.10.75 கோடிக்கு ஏலம்
ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் 2 நாள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தொடங்கியது. இந்நிலையில் 2-வது நாள் மெகா ஏலம் தொடங்கியது. இதில் முதல் வீரராக ரோவ்மன் பவலை கொல்கத்தா அணி ரூ. 1.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்திய இளம் வீரரான பிரித்வி ஷாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரை ஏலத்தில் எடுக்க ஆரம்பம் முதலே மும்பை - லக்னோ அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் கடைசி நேரத்தில் களமிறங்கிய பெங்களூரு ரூ.10.75 கோடிக்கு வாங்கியது.
_______________________________________-__________________________
டெல்லி அணியின் கேப்டன் யார்?
முதல் நாள் ஏலத்தில் டெல்லி அணி லக்னோவின் முன்னாள் கேப்டனாக ராகுலை வாங்கியது. இதையடுத்து டெல்லி அணியின் அடுத்த கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், ராகுலை வாங்கிய பின்னர் டெல்லி அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் அளித்த பேட்டியில் கூறியதாவது, நாங்கள் டாப் ஆர்டரில் நிலைத்தன்மையை எதிபார்த்து கொண்டிருந்தோம். இன்னிங்ஸை எடுத்து செல்லக்கூடிய அனுபவமுள்ள ஒருவர் எங்களுக்கு தேவைப்பட்டார். அதற்காக கே.எல்.ராகுலை எடுத்துள்ளோம்.
கே.எல்.ராகுல் ஒவ்வொரு ஐ.பி.எல் சீசனிலும் தொடர்ந்து 400 ரன்களுக்கு மேல் கொடுத்த ஒருவர் என்று நான் நினைக்கிறேன். மேலும், கோட்லா விக்கெட் அவரது ஆட்டத்திற்கு ஏற்றதாக இருக்கும் என நினைக்கிறேன். அவரைப் பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், எங்களிடம் மிகவும் இளம் பேட்டிங் வரிசை உள்ளது. கே.எல்.ராகுல் மற்றும் அக்சர் இருவரும் அவர்களை வழிநடத்தப் போகிறார்கள். கே.எல்.ராகுலின் பேட்டிங்கும் அனுபவமும் சக்கரத்தில் ஒரு முக்கிய கோலாக இருக்கும், இவ்வாறு அவர் கூறினார்.
_______________________________________-__________________________
ஸ்ரேயாஸ் குறித்து பாண்டிங்
ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலத்தில் கொல்கத்தா அணிக்காக ஸ்ரேயாஸ் அய்யரை வாங்கியது ஏன் என்பது குறித்து ரிக்கி பாண்டிங் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, எனக்கு ஒன்று கிடைக்காமல் மற்றொன்று கிடைத்திருக்கிறது. நான் ரிஷப் பண்ட் பற்றி கூறுகிறேன். ரிஷப் பண்ட் மதிப்பு என்ன என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். விளையாட்டின் மதிப்போடு ஒரு அணிக்கு அவரது மதிப்பு நன்றாக தெரியும். அவர் ஒரு ஆற்றல் மிக்க வீரர். அவர் விளையாட்டை நேசிக்கக் கூடிய ஒரு இயற்கையான வெற்றியாளர். ஆனால் ஸ்ரேயாஸ் அய்யரோடு நான் கடந்த காலத்தில் ஏற்கனவே பணியாற்றி இருக்கிறேன்.
அவர் ஐபிஎல்லில் ஒரு வெற்றிகரமான கேப்டனாக இருந்துள்ளார். அவருடன் நான்கு ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. நிச்சயமாக அவர் கடந்த சீசனில் ஐ.பி.எல் கோப்பையை வெற்றி பெற்ற ஒரு கேப்டனாக இருக்கிறார். எனவே அந்த வகையில் சிந்தித்தால் ஐ.பி.எல் கோப்பையை வெற்றி பெற்று தரக்கூடிய ஒரு வீரரை நாங்கள் பெற்றிருக்கிறோம். கேப்டன் பொறுப்பு குறித்து அவரிடம் இன்னும் நான் பேசவில்லை. ஐ.பி.எல் ஏலத்திற்கு முன்பாக அவரது தொலைபேசிக்கு முயற்சி செய்தேன், ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
25 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு இ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.