எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தல் சரித்திர தேர்தலாக இருக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சர்வதேச அரசியல் என்ற தலைப்பிலான படிப்பை பயில, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தேர்வானார். இதற்காக, கடந்த ஆகஸ்டு மாதம் 28-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம், அண்ணாமலை இங்கிலாந்து புறப்பட்டு சென்றார்.
சர்வதேச அரசியல் படிப்பை பயின்று வந்த அதே காலக்கட்டத்தில், லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொண்டார். மேலும் அங்குள்ள தமிழக மாணவர்களை சந்தித்து, அண்ணாமலை கலந்துரையாடினார்.
இந்த நிலையில், சர்வதேச அரசியல் படிப்பை முடித்து விட்டு நேற்று முன்தினம் 30-ம் தேதி இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு நேற்று அவர் தமிழகம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலைக்கு பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது,
அரசியல் படிப்பு தொடர்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் முன்னாள் பிரதமர்கள் பாடம் எடுத்தார்கள். 3 மாத காலம் எனக்கு கிடைத்த பாக்கியம். கடந்த 3 மாதங்களில் பா.ஜ.க. உறுப்பினர்கள் சேர்க்கை வெற்றிகரமாக நடந்துள்ளது.
உறுப்பினர் சேர்கைக்கு உழைத்த எச்.ராஜா உள்பட மூத்த தலைவர்களுக்கு நன்றி. தமிழக பா.ஜ.க.வில் கிளைத் தலைவர் முதல் மாநில தலைவர் வரை தேர்தல் நடக்கிறது. 3 மாதங்களில் தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்கள் நடந்துள்ளன.
2026 சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ.க. தயாராகி வருகிறது. அரசியலுக்கு வந்துள்ள நடிகை விஜய்யை வரவேற்கிறேன். விஜய்யின் அரசியல் வருகை மக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திராவிட சிந்தாந்தத்தையே விஜய் பேசுகிறார். புதிதாக ஒன்றும் இல்லை.
அக்டோபர் மாதத்திற்கு பிறகு விஜய் எத்தனை முறை வெளியே வந்துள்ளார். தமிழகத்தில் திராவிட கட்சிகள் மூன்றாக பிரிந்துள்ளன. திராவிட கட்சிகளின் கொள்கையைத் தான் விஜயும் பேசுகிறார்.
பா.ஜ.க.வை பொறுத்தவரை புதிய கட்சிகளுக்கு பயப்படாது. எங்கே விமர்சிக்க வேண்டுமோ, அங்கே விமர்சிப்போம். 2026 சட்டமன்றத் தேர்தல் சரித்திர தேர்தலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 4 days ago |
-
காய்ச்சல்: மருத்துவமனையில் ஏக்நாத் ஷிண்டே அனுமதி
03 Dec 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-12-2024.
03 Dec 2024 -
நேரில் சென்று நிவாரணம் வழங்காதது ஏன்? த.வெ.க. தலைவர் விஜய் விளக்கம்
03 Dec 2024சென்னை, நேரில் சென்றால் நெரிசல் ஏற்படும் என்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரணம் வழங்காதது குறித்து த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் விளக்கமளித்துள்ளார்.
-
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி : மீது சேறு வீசப்பட்டதாக புகார்
03 Dec 2024விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார்
03 Dec 2024ப
-
ரேஷன் கார்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின்
03 Dec 2024சென்னை, ஃபெஞ்சல் புயல் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின
-
ஆஸி. வாரியத்திற்கு புதிய தலைவர்
03 Dec 2024ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான நிக் ஹாக்லியின் பதவிக்காலம் 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.