எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தின் 18 மாவட்டங்களில் ரூபாய் 177 கோடியே 84 லட்சத்து 60 ரூபாய் செலவில் புதிதாக 34 உயர்மட்ட பாலங்கள் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஊரகப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே தமிழ்நாடு அரசின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, ஊரகப் பகுதிகளில் அடிப்படைத் தேவைகளான சாலைகள், உயர்மட்ட பாலங்கள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊரகச் சந்தைகள், உணவு கிடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்தி, புதிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அதனைத் திறம்படச் செயல்படுத்தி, தமிழ்நாடு அரசு நாட்டிலேயே முன்னோடியாக விளங்கி வருகிறது.
அதன்படி, 2024-25ம் ஆண்டில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள், அறிவிப்புகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இணைப்பு வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளில் தேவைப்படும் உயர்மட்ட பாலங்களை முன்னுரிமைப்படுத்தி, 18 மாவட்டங்களில் 1977.20 மீ நீளமுள்ள 34 உயர்மட்ட பாலங்கள் ரூபாய் 177 கோடியே 84 லட்சத்து 60 ரூபாய் செலவில் கட்டுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு., கோவை மாவட்டம் காரமடை வட்டத்தில் சிக்காரபாளையம் - கருப்பராயன் நகர் சாலை ஏலருமல்பள்ளம் ஆற்றில் ரூபாய் 2 கோடியே 83 லட்சம் செலவில் ஒரு பாலம். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் மலட்டாறு ஆற்றில் திருவாமூர் ஊராட்சியில் ரூபாய் 8 கோடியே 13 லட்சத்து 44 ஆயிரம் செலவில் ஒரு பாலம். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் குடகனாறு ஆற்றில் மணலூர் ஊராட்சியில் சித்தரேவு தாண்டிக்குடி சாலையில் ரூபாய் 8 கோடியே 52 லட்சத்து 69 ஆயிரம் செலவில் ஒரு பாலம். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டத்தில் நலுங்கு பாறை ஆற்றில் வாச்சாத்தி அரசநத்தம் இடையில் ரூபாய் 3 கோடியே 83 லட்சம் செலவில் ஒரு பாலம்.ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்தில் செல்லபூரம்மன் ஓடையில் ரூபாய் 5 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரம் செலவில் ஒரு பாலம். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் கொரட்டி ஆற்றில் ரூபாய் 5 கோடியே 57 லட்சம் செலவில் ஒரு பாலம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் பாம்பாறு ஆற்றில் ரூபாய் 4 கோடியே 32 லட்சத்து 20 ஆயிரம் செலவில் ஒரு பாலம். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டத்தில் வேப்பனப்பள்ளி தீர்த்தம் சாலை கத்திரிபள்ளியில் ரூபாய் 7 கோடியே 1 லட்சத்து 40 ஆயிரம் செலவில் ஒரு பாலம். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டத்தில் ஒட்டப்பள்ளி பட்டிபடுகு சாலையில் ரூபாய் 3 கோடியே 59 லட்சத்து 90 ஆயிரம் செலவில் ஒரு பாலம். மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் பதினெட்டாம்குடி ஓடையில் 1 கோடியே 42 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் வட்டத்தில் புதுபட்டி கெடமலை சாலையில் 3 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். புதுப்பட்டி அதே சாலையில் 2 கோடியே 68 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் மற்றொரு பாலம். சேலம் மாவட்டம், பி.என்.பாளையம் வட்டத்தில் வில்வனூர் மாயவன் கோவில் சாலையில் வசிஸ்டர் ஆற்றில் 3 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்.
ஆத்தூர் வட்டத்தில் துலுக்கானூரில் வசிஸ்டர் ஆற்றில் 4 கோடியே 27 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். கங்கவள்ளி வட்டத்தில் வேப்படி பாலக்காடு சாலையில் 1 கோடியே 74 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். அயோத்தியாபட்டினம் வட்டத்தில் திருமணிமுத்தாரில் 1 கோடியே 99 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். பி.என்.பாளையம் வட்டம் வைத்திய கவுண்டன் புதூர் ஏத்தாப்பூர் சாலையில் வசிஸ்டர் ஆற்றில் 5 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்.
அதே பி.என்.பாளையம் வட்டம் இடையாப்பட்டி ஊராட்சியில் வசிஸ்டர் ஆற்றில் குறுக்கே 3 கோடியே 76 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் தாவணி - மல்லிக்கோரை சாலையில் 3 கோடியே 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டத்தில் தாராபுரம் வெள்ளக்கோவில்சாலை அமராவதி ஆற்றில் 14 கோடி ரூபாய் செலவில் ஒரு பாலம். தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டத்தில் பட்டுவனாச்சி ஓடையில் 4 கோடியே 10 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டத்தில் ஆறுமுக மங்களம் சாலையில் 3 கோடியே 36 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்தில் டி.புதுபட்டி சின்னையபுரம் சாலையில் 3 கோடியே 97 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உப்பாறு ஆற்றில் குறுக்கே இரத்தினகுடிசாலை ஆர்.வளவனூர் ஊராட்சியில் 10 கோடியே 91 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் களத்தில் வென்றார் பேட்டை சாலையில் நந்தியூர் கால்வாயில் 10 கோடியே 19 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் புல்லம்பாடி வைக்கல் புரந்தகுடி - ரெத்மாங்குடி சாலையில் குறுக்கே 2 கோடியே 81 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டத்தில் வெங்கடாசலபுரம் பிராஞ்சேரி சாலையில் சித்தாறு ஆற்றில் 10 கோடியே 63 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம் பெருமாள்கோவில் அருகே பேயாற்றின் குறுக்கே 2 கோடியே 28 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். வேலூர் மாவட்டம், அதே அணைக்கட்டு ஒன்றியத்தில் பெருமாள்கோவில் அருகே பேயாற்றின் குறுக்கே 2 கோடியே 36 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்.
வேலூர் மாவட்டம், அதே அணைக்கட்டு ஒன்றியத்தில் பொய்கை கிராமத்தில் சதுப்பேரி கால்வாய் குறுக்கே 1 கோடியே 65 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். விழுப்புரம் மாவட்டம், மரக்கானம் வட்டம், அன்னம்புதூர் - ஓமந்தூர் சாலையில் நரசிம்மனாறு ஓடையின் குறுக்கே 5 கோடியே 51 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், சிறுவாடியில் செஞ்சி ஆற்றில் குறுக்கே 6 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பாலம்.
விழுப்புரம் மாவட்டம், வள்ளம் வட்டத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கொங்கராபட்டு - மணியம்பட்டு இடையே 9 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பாலம். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கணக்கநேந்தல் - ஜோகில்பட்டி இடையே குண்டாறு ஆற்றின் குறுக்கே 9 கோடியே 89 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். இந்தப் பாலங்களின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 2 weeks ago |
-
தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழை பெய்யும்: சென்னை வானிலை மையம் தகவல்
19 Dec 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-12-2024.
19 Dec 2024 -
எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும்: ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு துணை முதல்வர் வாழ்த்து
19 Dec 2024சென்னை, எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் புதிதாக 34 உயர்மட்ட பாலங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
19 Dec 2024சென்னை, தமிழகத்தின் 18 மாவட்டங்களில் ரூபாய் 177 கோடியே 84 லட்சத்து 60 ரூபாய் செலவில் புதிதாக 34 உயர்மட்ட பாலங்கள் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரளா மருத்துவக்கழிவுகள்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
19 Dec 2024சென்னை, கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப
-
ஈரோடு, சென்னிமலையில் கூட்டு குடிநீர் திட்டம் இன்று திறந்து வைக்கிறார்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
19 Dec 2024ஈரோடு, ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 434 கிராமங்கள் குடிநீர் பெறும் வகையில் ரூ.482 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன
-
அமித்ஷா உருவ பொம்மையை எரித்து வி.சி.க.வினர் போராட்டம்
19 Dec 2024சென்னை, அமித்ஷா உருவ பொம்மையை எரித்து வி.சி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
ஈரோட்டில் 2-வது கோடி பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை நேரில் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
19 Dec 2024ஈரோடு, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் 2-வது கோடி பயனாளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகத்தை நேரில் வழங்கினார்.
-
அமித்ஷாவை கண்டித்து வி.சி.க.வினர் ரயில் மறியல் போராட்டம்
19 Dec 2024சென்னை, அமித்ஷாவை கண்டித்து வி.சி.க.வினர் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
-
14 ராமேசுவரம் மீனவர்கள் விடுதலை இலங்கை நீதிமன்றம் உத்தரவு
19 Dec 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
-
பொதுச்செயலாளர் பதவி தொடர்பான இ.பி.எஸ்.க்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
19 Dec 2024சென்னை, எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதி
-
பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
19 Dec 2024சென்னை, மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாளை ஒட்டி, அவரது உருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் மலர்தூவி
-
கூகுள் இந்தியா புதிய மேலாளர் நியமனம்
19 Dec 2024புதுடெல்லி, கூகுள் இந்தியாவின் புதிய நாட்டு மேலாளர் மற்றும் துணைத் தலைவராக ப்ரீத்தி லோபனா நியமிக்கப்பட்டுள்ளார்.
-
பார்லி. வளாகத்தில் தள்ளு முள்ளு: பா.ஜ.க. எம்.பி. காயம்; ராகுல் காந்தி விளக்கம்
19 Dec 2024புதுடெல்லி, பாராளுமன்ற வளாக படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
-
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை
19 Dec 2024ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று காலை நடந்த என்கவுன்ட்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
மிசோரம் சிறையில் இருந்து 2 மியான்மர் கைதிகள் தப்பி ஓட்டம்
19 Dec 2024ஐஸ்வால், கிழக்கு மிசோரமின் சம்பாய் மாவட்டத்தில் உள்ள சிறையில் இருந்து இரண்டு மியான்மரை சேர்ந்த கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
286 மி. டாலர் அளவில் உக்ரைனுக்கு பிரிட்டன் நிதியுதவி
19 Dec 2024லண்டன், ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைன் ராணுவத்திற்கு 286 மில்லியன் டாலர் நிதியுதவியை பிரிட்டன் அறிவித்துள்ளது.
-
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: பார்லி. வளாகத்தில் பா.ஜ.க., இன்டியா கூட்டணி போராட்டம்
19 Dec 2024புதுடெல்லி, அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சிகளும், அமித் ஷா கருத்தை எதிர்க்கட்சிகள் திரித்து சர
-
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை
19 Dec 2024ராமேஸ்வரம், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆய்வு இன்ஜினை இயக்கி, ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் ஆய்வு நடத்தினர்.
-
அம்பேத்கர் அவமதிப்பு பேச்சு: அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
19 Dec 2024சென்னை, அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில் நேற்று (19-12-2024) தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
பொய் சொல்வதை நிறுத்துங்கள்: அம்பேத்கர் விவகாரத்தில் காங். மீது பா.ஜ.க. தாக்கு
19 Dec 2024புதுடெல்லி, அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.
-
தங்கம் விலை மேலும் சரிவு
19 Dec 2024சென்னை, தங்கம் விலை நேற்று மேலும் சரிந்து விற்பனையானது.
-
பா.ஜ.க. எம்.பி. காயம்: ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
19 Dec 2024டெல்லி, பா.ஜ.க. எம்பிக்களை தாக்கிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
-
அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சு: மாநிலங்களவையில் அமித்ஷாவுக்கு எதிராக காங். உரிமை மீறல் நோட்டீஸ்
19 Dec 2024புதுடெல்லி, அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக மாநிலங்களவையில் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.