முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. வளாகத்தில் தள்ளு முள்ளு: பா.ஜ.க. எம்.பி. காயம்; ராகுல் காந்தி விளக்கம்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      இந்தியா
Rahul-2024-12-19

புதுடெல்லி, பாராளுமன்ற வளாக படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ராகுல் காந்தி ஒரு எம்பியை தள்ளினார் அந்த எம்பி என் மீது விழுந்ததால் நான் கீழே விழுந்து காயமடைந்தேன் என பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்ததற்கு ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு புறம் காங்கிரசுக்கு எதிராக பாஜக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் சந்திர சாரங்கி, “ராகுல் காந்தி ஒரு பாராளுமன்ற உறுப்பினரைத் தள்ளினார். அப்போது நான் படிக்கட்டுகளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அந்த எம்பி என் மீது விழுந்ததால் நான் கீழே விழுந்துவிட்டேன்” என்று கூறினார்.

காயமடைந்த பிரதாப் சந்திர சாரங்கியை ராகுல் காந்தி பார்த்துவிட்டு பின் திரும்பிச் சென்றார். இந்த சம்பவம் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, “நான் பாராளுமன்ற நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றேன். ஆனால் பாஜக எம்.பி.க்கள் என்னைத் தடுத்து, என்னைத் தள்ளி, மிரட்ட முயன்றனர். இது நடந்தது. ஆம், இது நடந்தது. ஆனால் சலசலப்பால் நாங்கள் பாதிக்கப்படுவதில்லை. நுழைவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு. பாஜக எம்.பி.க்கள் எங்களை உள்ளே செல்லவிடாமல் தடுக்க முயன்றனர். பாஜக அரசியல் சாசனத்தைத் தாக்கி அம்பேத்கரின் புகழை அவமதிக்கிறது என்பதே மையப் பிரச்சினையாக உள்ளது.” என்று கூறினார்.

பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்து காயம் பட்டது குறித்துப் பேசிய பாஜக எம்பி கிரிராஜ் சிங், “ராகுல் காந்தி சபையில் அராஜகத்தை பரப்ப விரும்புகிறார். எம்.பி. பிரதாப் சாரங்கிக்கு நடந்த சம்பவம் கண்டனத்திற்குரியது. அவர் தள்ளப்பட்டார். இதனால் கீழே மயங்கி விழுந்தார். இது போக்கிரித்தனம் இல்லையா?.” எனக் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து