முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனாமி 20-ம் ஆண்டு நினைவு தினம்: புதுச்சேரி துணைநிலை கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2024      தமிழகம்
Tsunami-Pondy-2024-12-26

புதுச்சேரி, சுனாமி 20-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கடலில் பால் ஊற்றி துணைநிலை கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி அலை தாக்குதலால் புதுவை, காரைக்காலில் 500-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். கடலோர கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய சுனாமி நினைவு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 26-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 20-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று புதுவை அரசு சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலை பின்புறம் அனுசரிக்கப்பட்டது.

சுனாமி பேரலை தாக்கிய கோர சம்பவங்கள் படங்களாக வைக்கப்பட்டிருந்தது. அங்கு துணைநிலை கவரனர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய்சரவணக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், நேரு, பாஸ்கர், லட்சுமிகாந்தன், பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல பல்வேறு மீனவ அமைப்புகள் சார்பில் சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கடலில் பால் ஊற்றி, மலர் தூவி சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மீனவர்கள் பலரும் சுனாமி நினைவுகளால் கண்ணீருடன் காணப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து