முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எச்.எம்.பி.வி. தொற்று பரவல் எதிரொலி: கர்நாடகாவில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      இந்தியா
Mask 2025-01-06

Source: provided

பெங்களூரு : பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி., தொற்று உறுதியான நிலையில், மாநிலத்தில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு அறிகுறி இருந்தால் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்; பரவும் அபாயத்தைக் குறைக்க நெரிசலான பகுதிகளில் முக கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. பெங்களூருவில், எட்டு மாத ஆண் குழந்தையும், மூன்று மாத பெண் குழந்தையும் எச்.எம்.பி.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள், வெளிநாடு செல்லவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

மத்திய அரசு, பீதி அடைய வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தும் அதே வேளையில், எச்.எம்.பி.வி., ஒரு புதிய வைரஸ் அல்ல என்றும், உலகளவில் மற்றும் நாட்டிற்குள்ளும் ஏற்கனவே இருப்பது தான் என்றும் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் எச்.எம்.பி.வி., கண்டறியப்பட்ட இரு குழந்தைகளில், மூன்று மாத குழந்தை ஏற்கனவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், எட்டு மாத குழந்தை குணமடைந்து வருகிறது.

இந்த நோய் பாதிப்புக்கு அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம் மற்றும் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், விரைவான சுவாசம், வியர்வை மற்றும் குளிர், தலைவலி, தசை வலி, சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவை அடங்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டியில் கூறியதாவது: மக்கள் பீதி அடைய வேண்டாம். எட்டு மாத ஆண் குழந்தை நலமாக இருக்கிறது. செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படும். இது ஏற்கனவே உள்ள வைரஸ். இது முதல் முறை பாதிப்பு அல்ல. வைரஸ் காரணமாக சில வகை மக்களுக்கு சுவாசக் கோளாறு உள்ளது. இந்த வைரஸ் முதன்முதலில் 2001 இல் நெதர்லாந்தில் கண்டறியப்பட்டது  இந்த விவகாரம் சீனாவில் இருந்து வந்ததா என்பது எங்களுக்குத் தெரியாது. நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோர் வெளிநாடு எங்கும் சென்று வராதவர்கள். அவர்கள் திருப்பதியில் இருந்து வந்தவர்கள். இருந்தாலும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, மாஸ்க் அணிய வேண்டியது அவசியமாகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து