முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      உலகம்
Fire

Source: provided

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. மேற்குப் பகுதியில், நேற்று முன்தினம் காலை பரவத் தொடங்கிய தீ இரவு வரை கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்தது. மலையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் காட்டுத் தீ சூழ்ந்ததால் பல வீடுகள் கருகின. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதேபோல் லாஸ் ஏஞ்சல்ஸின் வடகிழக்கில் அல்டடேனா மலையடிவாரத்திலும் காட்டுத்தீ பரவியது. கடுமையான காற்று வீசுவதால் தீ வேகமாக பரவி வருகிறது. மலையடிவார குடியிருப்புகளையும் தீ சூழ்ந்ததால் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

ஒரு முதியோர் பராமரிப்பு மையத்தையும் தீ சூழ்ந்தது. அங்கு தங்கியிருந்த முதியோர்களை ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றி, சக்கர நாற்காலிகள் மற்றும் மருத்துவமனை படுக்கைகளுடன் பார்க்கிங் பகுதிக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் மூலம் வேறு இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். சில இடங்களில் 60 மைல் வேகத்தில் காற்று வீசுவதால் தீப்பிழம்புகள் வேகமாக பரவுகின்றன. தீயணைக்கும் விமானங்கள் கூட பறக்க முடியாத அளவுக்கு காற்று வீசியதால் தீயணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து