முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவில் சுற்றுலா விமானம் விபத்து-3 பேர் பலி

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      உலகம்
Halikafter 2024-04-30

Source: provided

பெர்த் : ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 3 வெளிநாட்டினர் பலியாகினர்.

மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் ரோட்நெஸ்ட் எனும் சுற்றுலாத் தீவு ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சிறிய ரக விமானங்களின் மூலமாக பயணம் செய்வார்கள்.

இந்நிலையில், நேற்று அம்மாநில தலைநகர் பெர்த்துக்கு திரும்புவதற்காக புறப்பட்ட செஸ்னா 208 கேரவன் எனும் சிறிய ரக கடல் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது அதை இயக்கிய உள்ளூர் விமானி மற்றும் அதில் பயணம் செய்த 2 சுற்றுலாப் பயணிகள் பலியானார்கள். இந்த விபத்தின்போது, அவர்களோடு அந்த விமானத்தில் பயணம் செய்த 4 பேர் உயிர் பிழைத்துள்ளனர். இருப்பினும், அதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அம்மாநில தலைநகர் பெர்த்திலுள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.

கடலினுள் விழுந்த விமானத்தின் பாகங்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில், பலியானவர்களது உடல்களை காவல் துறை நீச்சல் வீரர்கள் 26 அடி ஆழத்திற்கு நீந்தி சென்று மீட்டனர்.  இந்த விபத்து குறித்து சிறப்பு புலணாய்வு அதிகாரிகள் அங்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் தற்போது வரையில் தெரியாத நிலையில் புறப்படும்போது பாறையில் மோதி விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என  கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து