முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எலான் மஸ்க் புதிய விருப்பம்

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      விளையாட்டு
Ealn Musk-2024-11-07

Source: provided

பிரபல கால்பந்து கிளப் அணியான லிவர்பூல் அணியை எலான் மஸ்க் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, உலக வரலாற்றில் 500 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெருமையை கடந்த டிசம்பரில் பெற்றிருந்தார்.

 

இந்த நிலையில், எலான் மஸ்க்கின் தந்தை எர்ரோல் மஸ்க் கூறியதாவது.,  நான் இது குறித்து கமெண்ட் தெரிவிக்க முடியாது. அவர்கள் விலையை ஏற்றிவிடுவார்கள். லிவர்பூல் அணியை வாங்குவாரென்றால் அவருக்கு விருப்பம் இருக்கிறது. ஆனால், அதற்காக அவர் வாங்கிவிடுவார் என்று சொல்லமுடியாது. யாராக இருந்தாலும் வாங்கமுடியும் எனில் அவரும் வாங்குவார் என்றார். தற்போது, லிவர்பூல் அணியை எஃப்எஸ்ஜி (ஃபென்வே ஸ்போர்ட்ஸ் குரூப்) வசமிருக்கிறது. அந்த அணியை விற்கும் எண்ணம் இல்லை ஆனால் வெளியிலிருந்து யாரவது முதலீடு செய்தால் அதற்கு சம்மதம் என தெரிவித்திருந்தார்கள்.

_______________________________________________________________________________

ஆப்கான் ஆலோசகராக யூனிஸ் 

8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடருக்கான அணிகளை வரும் 12-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.  இந்நிலையில், இந்த தொடருக்காக ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக பாகிஸ்தான் முன்னாள் வீரரான யூனிஸ் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யூனிஸ் கான் பாகிஸ்தான் அணிக்காக 118 டெஸ்ட், 265 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அறிவிப்பை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.

_______________________________________________________________________________

தடகள சம்மேளனத்திற்கு தலைவர்

இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சண்டிகாரில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல் நாளில் 2025-2029-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. 2002-ம் ஆண்டு பூசனில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்றவரான பஞ்சாப்பை சேர்ந்த 51 வயது பகதூர் சிங் சாகூ புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் திடீரென ஒதுங்கியதால் பகதூர் சிங் போட்டியின்றி தேர்வானார்.

_______________________________________________________________________________

சிட்னி தண்டர்ஸ் வீரர்கள் விலகல்

ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற டி20 போட்டியான பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணியின் வீரர்கள் பலர் காயத்தால் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதனால், அணியில் ஆள் பற்றாக்குறையால் அணியின் உதவிப் பயிற்சியாளரே மீண்டும் மாற்று வீரராகக் களமிறங்கியுள்ளார். கடந்த 2 சீசன்களாக சிட்னி அணியின் பயிற்சியாளராக இருக்கும் 41 வயதான டேன் கிறிஸ்டியன், அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவராக காயத்தால் விலகி வருவதால் மாற்று வீரராக அணியில் இணைந்துள்ளார்.

சில நாள்களுக்கு முன்னதாக பெர்த் அணிக்கு எதிரான போட்டியில் மேலே அடிக்கப்பட்ட பந்தை பிடிக்க முயன்ற போது சிட்னி வீரர்கள் டேனியல் சாம்ஸ் மற்றும் பான்கிராப்ட் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சாம்ஸ் சுயநினைவை இழந்த நிலையில், பான்கிராஃப்ட்டுக்கு மூக்கு உடைந்தது மட்டுமின்றி தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களைத் தவிர்த்து தன்வீர் சங்கா தசைப் பிடிப்பாலும், ஜேசன் சங்கா கையில் காயத்தாலும் விலகியுள்ளனர். மேலும், 19 வயதான இளம் வீரர் சாம் கான்ஸ்டஸ் இந்தியாவுக்கு எதிரான பார்டர்- கவாஸ்கர் தொடரில் கலந்து கொண்டதாலும் வேறு மாற்று வீரர்கள் இன்றி, பயிற்சியாளர் டேன் கிறிஸ்டியன் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து