முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: சைதாப்பேட்டையில் இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர்

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      தமிழகம்
Stalin 2024-12-21

Source: provided

சென்னை: ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜன. 9) தொடக்கி வைக்கிறார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை மக்களுக்கு வழங்கி இத்திட்டத்தினை தொடக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் முன்னதாக அறிவித்தார்.

இதற்காக, குடும்ப அட்டைதாரா்களுக்கு 2-1-2025 முதல் நியாயவிலைக் கடை விற்பனையாளா்களால் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. டோக்கன் பெற்றுக்கொண்ட குடும்ப அட்டைதாரா்கள் அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாள்களில் அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை சென்னை சைதாப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். பொங்கல் பரிசுத் தொகுப்பானது 9-1-2025 முதல் 13-1-2025 வரை நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து