முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் பிரதமர் மோடி ரோடு ஷோ : முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      இந்தியா
Modi 2024-11-25

Source: provided

விசாகப்பட்டினம் : ஆந்திராவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ரோடு ஷோ நடத்தினர். சாலையின் இருபுறங்களில் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பளித்தனர்.

விமானம் மூலம் விசாகப்பட்டினம் வந்த பிரதமர் மோடியை, கவர்னர் அப்துல் நசீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து, ஆந்திரா பல்கலை மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி புறப்பட்டார்.

திறந்த வெளி வாகனத்தில் ரோடு ஷோ நடத்தி பிரதமர் மோடியை, சாலைகளின் இருபுறங்களில் தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு நின்று வரவேற்றனர். தொண்டர்கள் பூக்களை வீசி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரதமருடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆந்திர மாநிலத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல்லையும் நாட்ட இருக்கிறார். விசாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள புடிமடகாவில் ரூ.18,500 கோடி மதிப்பிலான நேஷனல் க்ரீன் எனர்ஜி ஹைட்ரோஜன் திட்ட மையத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்த மையம் 20 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க சக்தியை உருவாக்கும் திறன் கொண்டது. இது இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையமாகும்.

அதுமட்டுமில்லாமல், பலகோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, 19,500 கோடி ரூபாயிலான ரயில்வே மற்றும் சாலை திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நாட்ட இருக்கிறார். சுகாதாரத்துறையின் சார்பில், அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள நாக்கபள்ளியில் டிரக் பார்க்கை கட்டுவதற்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார். அதேபோல, திருப்பதியில் உள்ள கிருஷ்ணபட்டினம் தொழிற்பேட்டையில் ரூ.10,500 கோடி மதிப்பிலான புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுகிறார். இதன்மூலம், ஒரு லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து