முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பும்ராவுக்கு பாண்டிங் புகழாரம்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      விளையாட்டு
Ricky-Ponting 2023-10-17

Source: provided

இந்திய பந்து வீச்சின் ஆணிவேராக கருதப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகுதண்டு வடத்தில் ஏற்பட்ட பாதிப்பால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் பந்து வீசாமல் ஓய்வு எடுத்தார். முன்னதாக இரு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட் எடுத்த ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலன்ட் ஆட்டநாயகன் விருதையும், இந்த தொடரில் 32 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். இந்நிலையில் இந்த தொடரில் தங்கள் நாட்டு பந்துவீச்சாளர்களை விட ஜஸ்பிரித் பும்ராதான் சிறந்தவராக செயல்பட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார். 

மேலும் சுமித், ஹெட் உள்ளிட்ட அனைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களையும் ஜஸ்பிரித் பும்ரா திணற விட்டதாகவும் பாண்டிங் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இது நான் பார்த்ததிலேயே வேகப்பந்து வீச்சு ராஜாங்கம் நடத்திய சிறந்த தொடர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகள் இந்தத் தொடர் முழுவதும் இருந்தது. ஆனால் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது பும்ராவின் பவுலிங், பேட்டிங்கை மிகவும் கடினமாக மாற்றியது. ஆஸ்திரேலிய டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில் நிறைய தரம் இருக்கிறது. ஆனால்  அவர்கள் அனைவரையும் பல்வேறு நேரங்களில் பும்ரா திணறடித்தார்" என்று கூறினார்.

_____________________________________________________________________________________________________

பாகிஸ்தான் ஜோடி சாதனை 

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 615 ரன்களும், பாகிஸ்தான் 194 ரன்களும் அடித்தன. இதனையடுத்து பாலோ ஆன் ஆன நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 'பாலோ ஆன்' ஆன பிறகு முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் அமைத்த தொடக்க ஜோடி என்ற மாபெரும் சாதனையை பாபர் அசாம் - ஷான் மசூத் படைத்துள்ளனர்.

அந்த பட்டியல், 1. பாபர் அசாம் - ஷான் மசூத் - 205 ரன்கள், 2. கிரெம் சுமித் - நீல் மெக்கன்சி - 204 ரன்கள், 3. தமிம் இக்பால் - இம்ருல் கயஸ் - 185 ரன்கள், 4. மார்கஸ் ட்ரெஸ்கோதிக் - மைக்கேல் வாகன் - 182 ரன்கள், 5. கிரஹாம் கூச் - மைக்கேல் அதர்டன் - 176 ரன்கள், இந்த போட்டியின் 3-வது நாள் முடிவில் பாகிஸ்தான் 1 விக்கெட்டை இழந்து 213 ரன்கள் அடித்துள்ளது. ஷான் மசூத் 102 ரன்களுடனும், குர்ரம் ஷசாத் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாபர் அசாம் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 208 ரன்கள் அடித்தாக வேண்டும் என்ற நிலையில் போராடி வருகிறது. 

_____________________________________________________________________________________________________

ஆப்கான் அணி புதிய மைல்கல்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் புலவாயோவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 44.3 ஓவரில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 2-வது இன்னிங்சை ஆடியது. இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு 278 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே நான்காம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கிரெய்க் எர்வின் அரை சதம் கடந்து 53 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதி நாள் நேற்று நடைபெற்றது. மீதம் இருந்த 2 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 7 விக்கெட்டும், ஜிய உர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் முதல் இருதரப்பு தொடரை ஆப்கானிஸ்தான் முதல் முறையாக வென்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து