முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காட்டு பன்றியை சுட்டுப்பிடிக்க இனி வனத்துறைக்கு அனுமதி சட்டசபையில் அமைச்சர் பொன்முடி தகவல்

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      தமிழகம்
Ponmudi 2023 04 05

Source: provided

சென்னை: விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடிக்க வனத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

காட்டுப் பன்றிகளின் தொல்லையால் விளை நிலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதிலளித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

”காட்டுப் பன்றிகளிடம் இருந்து விவசாயிகளைக் காக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு சில பரிந்துரைகளைக் கொடுத்தார்கள். அதன் அடிப்படையில் அரசாணை தயார் செய்து நேற்று முன்தினம் (ஜன. 9) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, காப்புக்காட்டிலிருந்து 1 கி.மீ. தொலைவு வரை உள்ள பகுதிக்கு வரும் காட்டுப்பன்றிகளைச் சுட அனுமதியில்லை. காப்புக்காட்டிலிருந்து 1 கி.மீ. - 3 கி/மீ. தொலைவு வரை உள்ள பகுதிக்கு வரும் காட்டுப்பன்றிகளைப் பிடித்து திருப்பி அனுப்ப வேண்டும். அதற்காக வனத்துறை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். காட்டுப் பன்றிகள் 3 கி.மீ.-க்கு அப்பால் வருமானால் காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது. விவசாயிகளே காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்” என்று பொன்முடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து