முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுவிப்பு

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      தமிழகம்
Ma-Suphramanian 2021 12-06

Source: provided

சென்னை: கவுன்சிலர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட 7 பேரை விடுவித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2002-ம் ஆண்டு  சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் அப்போதைய துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., சென்னை கண்ணப்பர் திடலில் மீன் அங்காடி அமைக்கும் டெண்டர் தொடர்பான பிரச்சினையை கிளப்பியது.  இதுதொடர்பாக, அந்த கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தி.மு.க. கவுன்சிலர்கள் அங்கிருந்த 'மைக்' மற்றும் நாற்காலிகளை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மீது தூக்கி வீசினர். இதில், அப்போதைய அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்க்கரசி, குமாரி உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அளித்த புகாரின்பேரில் சென்னை பெரியமேடு போலீசார், அப்போதைய தி.மு.க. கவுன்சிலர்களான அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், செல்வி சவுந்தரராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கில், 2019-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,  முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், செல்வி சவுந்தரராஜன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரை விடுவித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சாட்சியம் அளித்தவர்கள் பிறழ்சாட்சியாக மாறியதாலும், சரிவர நிரூபிக்காததாலும் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரை விடுவித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து