முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டங்ஸ்டன் திட்டம் கண்டிப்பாக வராது: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதி

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, மத்திய அரசின் சுரங்க திட்டத்திற்கு ஆதரவு அளித்து துரோகம் இழைத்தது அ.தி.மு.க. தான். டங்ஸ்டன் திட்டம் வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன். தொடர்ந்து டங்ஸ்டன் திட்டம் குறித்து மீண்டும் பேசி மக்களை குழப்புகின்றனர். கண்டிப்பாக டங்ஸ்டன் திட்டம் என்பது இங்கு வராது. உறுதியாக சொல்கிறேன் நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது என்று சட்டசபையில் மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மிகவும் சொற்பமான தொகையை தான் மத்திய அரசு விடுவித்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை. ஃபெஞ்சல் புயல் மீட்பு பணிகளுக்கு ரூ. 6,675 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நிதியும் கொடுக்கவில்லை. எங்களுடைய ஆட்சி காலத்தில் சில திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

அதே சமயம் சில திட்டங்களை நிறைவேற்றமுடியாமலும் இருக்கிறோம். நிதி இல்லாத காரணத்தால் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கருணை அரசுக்கு கருணை இருக்கிறது; ஆனால் நிதி இல்லை என ஒருமுறை மறைந்த முதல்வர் கருணாநிதி கூறினார். அதே நிலை தான் தற்போதும் உள்ளது.

2011-21 வரையிலான பாதாளத்தில் இருந்து, தமிழ்நாட்டை மீட்டு எடுத்துள்ளோம். தேசிய உயர்கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படுத்த வேண்டிய திட்டங்களும் தேசிய கல்வி கொள்கையால் முடங்கி உள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மிகவும் சொற்பமான தொகையை தான் மத்திய அரசு விடுவித்தது

ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை. எத்தனையோ முறை நினைவூட்டி கேட்டிருக்கிறோம். இதுவரை விடுவிக்காத காரணத்தால், மாநில அரசே சொந்த வருவாயை பயன்படுத்தி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறது. தமிழக அரசின் நிலை. இன்னொரு பக்கம் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

வீடுதோறும் குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.4,142 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும், ஆனால் ரூ.732 கோடி தான் வழங்கி உள்ளது. மத்திய அரசு தனது திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை தமிழ்நாடு அரசு மீது திணிப்பதால் மாநில அரசின் முன்னுரிமை திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை அளிக்க முடியாத நிலை உள்ளது

மத்திய அரசின் சுரங்க திட்டத்திற்கு ஆதரவு அளித்து துரோகம் இழைத்தது அ.தி.மு.க. தான். டங்ஸ்டன் திட்டம் வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன். தொடர்ந்து டங்ஸ்டன் திட்டம் குறித்து மீண்டும் பேசி மக்களை குழப்புகின்றனர். கண்டிப்பாக டங்ஸ்டன் திட்டம் என்பது இங்கு வராது. உறுதியாக சொல்கிறேன் நான் முதல்-அமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து