முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா -அமெரிக்கா இடையே வர்த்தகத்தை 2030-க்குள் 500 பி.டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் பிரதமர் மோடி- அதிபர் டிரம்ப் சந்திப்பில் முடிவு

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2025      உலகம்
Modi-Trump 2024-03-18

Source: provided

வாஷிங்டன்: பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பில், வரும் 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை ரூ. 43.43 லட்சம் கோடியாக (500 பில்லியன் டாலர்) அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பு மிகச் சிறந்ததாக இருந்தது. எங்கள் பேச்சுவார்த்தைகள் இந்தியா-அமெரிக்கா நட்புறவுக்கு குறிப்பிடத்தக்க உத்வேகத்தை அளிக்கும்.

 வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம். அமெரிக்க சூழலில் இதை மேக் இந்தியா கிரேட் அகெய்ன் என மொழிபெயர்க்கலாம். இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து, செழிப்புக்காக ஒரு மெகா கூட்டாண்மையைக் கொண்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

2030-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவுடனான வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இந்தியா இலக்கு வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். போர் விமானங்கள் உட்பட அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ட்ரம்ப், இந்தியாவின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளையராக அமெரிக்கா திகழும் என்றும் கூறினார்.

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகக் கூறிய ட்ரம்ப், சில பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி காரணமாக அவற்றை ஏற்றுமதி செய்வது சாத்தியமற்றதாக உள்ளதாகத் தெரிவித்தார். "இந்தியா பல பொருட்களுக்கு 30, 40, 60, மற்றும் 70 சதவீத வரிகளை விதிக்கிறது. சில சந்தர்ப்பங்களில், அதை விட மிக அதிகமாகவும் வரி விதிக்கப்படுகிறது. உதாரணமாக, இந்தியாவிற்குள் நுழையும் அமெரிக்க கார்களுக்கு 70 சதவீத வரி விதிக்கப்பட்டால், அந்த கார்களை விற்பனை செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

இன்று, இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்த நீண்டகால ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய பிரதமர் மோடியும் நானும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளோம் என தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, வரும் 2030க்குள் இருதரப்பு வர்த்தகத்தை ரூ. 43.43 லட்சம் கோடியாக (500 பில்லியன் டாலர்) அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து