முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் 2 புதிய இந்திய தூதரகங்கள் பிரதமர் மோடி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2025      உலகம்
Modi PM 2024-12-20

Source: provided

வாஷிங்டன்:இந்திய - அமெரிக்க மக்களுக்கு இடையிலான மெகா உணர்வு நமது இலக்குகளுக்கு புதிய பரிமாணத்தையும், உயர்ந்த நோக்கத்தையும் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்கள் மத்தியில்  உரை ஆற்றினார். அவர் பேசுகையில், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது அன்புக்குரிய நண்பர் அதிபர் ட்ரம்ப்புக்கு நன்றி. அதிபர் ட்ரம்ப் தமது தலைமையின் மூலம் இந்திய-அமெரிக்க உறவைப் போற்றி புத்துயிர் அளித்துள்ளார்.

அவரது முதல் பதவிக்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றிய போது இருந்த உற்சாகம்; இன்றும் அதே அளவில் உள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பும், கூட்டாண்மையும் ஒரு சிறந்த உலகத்தை வடிவமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.  அதிபர் ட்ரம்ப்பின் குறிக்கோளான "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்" அல்லது மகா("MAGA")வும்,  இந்தியாவை மீண்டும் சிறந்ததாக்குங்கள், அதாவது மிகா( "MIGA")வும்   இணையும்போது செழிப்புக்கான "MEGA" கூட்டாண்மை உருவாகிறது. மேலும், இந்த மெகா உணர்வு நமது இலக்குகளுக்கு புதிய பரிமாணத்தையும், உயர்ந்த நோக்கத்தையும் அளிக்கிறது.

 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.  இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தை வலுப்படுத்துவோம். இந்தியாவின் பாதுகாப்புத் தயாரிப்பில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது.   அடுத்த பத்தாண்டுகளுக்கு பாதுகாப்புத்துறை ஒத்துழைப்புக்கான சட்டக வரைவு உருவாக்கப்படும். பாதுகாப்பு செயல்பாடு, தளவாடங்கள், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவை அதன் முக்கிய பகுதிகளாக இருக்கும்.

செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள், குவாண்ட்டம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்.

விண்வெளித் துறையில் அமெரிக்காவுடன் எங்களுக்கு நெருக்கமான ஒத்துழைப்பு உள்ளது. இ‍ஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோள், விரைவில் இந்திய ஏவுகணை வாகனத்தில் இருந்து விண்வெளிக்குச் செல்லும்.  இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டாண்மையானது ஜனநாயகம் மற்றும் ஜனநாயக மதிப்புகள், அமைப்புகளை ஆதரிக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். இதில் குவாட் என்ற நால்தரப்பு பாதுகாப்பு பேச்சு வார்த்தை சிறப்புப் பங்கை வகிக்கும். இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில், புதிய பகுதிகளில் கூட்டாண்மை நாடுகளுடன் ஒத்துழைப்பை அதிகரிப்போம்.  

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக இணைந்துள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். 2008-ம் ஆண்டு இந்தியாவில் படுகொலைகளை நிகழ்த்திய குற்றவாளியை இப்போது இந்தியாவிடம் ஒப்படைக்க அதிபர் முடிவு செய்ததற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இந்திய நீதிமன்றங்கள் இப்போது பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்.

அதிபர் ட்ரம்ப் அவர்களே,  1.4 பில்லியன் இந்தியர்களின் சார்பாக, உங்களை இந்தியாவுக்கு வருமாறு அழைக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து