முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிற்கு எப்-35 ரக விமானங்களை வழங்குகிறது அமெரிக்கா: டிரம்ப் தகவல்

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2025      உலகம்
Trump 2024 08 17

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்கா இந்தியாவிற்கு எப் 35 ரக ஜெட் விமானங்களை வழங்கும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணாமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்பை இந்திய நேரப்படி நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் சந்தித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜனாதிபதி டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து விவாதித்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது,

இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வழங்கும் நாடாக அமெரிக்கா இருக்கும். இந்தாண்டு முதல் இந்தியாவுக்கு அதிகளவிலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்யவுள்ளோம். மேலும், இந்தியாவுக்கு எப் 35 ரக ஜெட் விமானங்களை வழங்கவுள்ளோம். உலகம் முழுவதும் தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவும் அமெரிக்காவும் "முன்பு இல்லாத அளவுக்கு" இணைந்து செயல்படும். 2030ம் ஆண்டுக்குள் இரு நாடுகளின் வர்த்தக பரிவர்த்தனை 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இலக்கை நிர்ணயித்துள்ளோம்.விரைவில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதை உறுதி செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து