முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமணத்திற்கு செல்வதில் தகராறு: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2025      இந்தியா
Thuku

Source: provided

லக்னோ : திருமணத்திற்கு செல்வதில் ஏற்பட்ட தகராறில் கணவன்- மனவைிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள காகரலா கிராமத்தை சேர்ந்தவர் ரோஹித் (26). நேற்றுமுன்தினம் மாலை குடும்பத்துடன் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் தனது மனைவி பார்வதியை தயாராகும்படி சொல்லியிருந்தார். ஆனால் அவர் வெளியே சென்று அதிகமாக குடிபோதையில் இருந்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பார்வதி வீட்டின் கூரையில் உள்ள ஒரு தாழ்ப்பாளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் மனைவி இறந்ததை அறிந்த ரோஹித், மிர்சாபூர் பேலா ரெயில் நிலையம் அருகே ரெயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து