எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம் என்று முதல்வர் மருந்தகம் திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (பிப்.24) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கல்வியும், மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரு கண்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 15 விடுதலை நாள் நிகழ்ச்சி கோட்டையில் நடைபெற்றபோது, கொடியேற்றிவிட்டு உரையாற்றும்போது, ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில், முதல் கட்டமாக ஆயிரம் மருந்தகங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தேன்.
அந்த அறிவிப்பு இன்றைக்கு செயல்பாட்டுக்கு வருவது பெருமகிழ்ச்சியை தருகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு தொடர்ந்து, அதிகளவில் மருந்துகளை வாங்க வேண்டிய காரணத்தால், அதிகமான செலவு ஆகிறது என்று பலரும் கவலைப்பட்ட காரணத்தால், இந்த மருந்தகங்களை திறக்க நாங்கள் திட்டமிட்டோம்.
சொன்னது போன்றே, ஆயிரம் மருந்தகங்களை திறந்திருக்கிறோம். இந்த மருந்தகங்களைச் சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும், மானியம் மற்றும் தேவையான கடனுதவியை அரசு வழங்கியிருக்கிறது. இந்த மருந்தகங்களை அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம்., , டி.பார்ம். முடித்தவர்களிடம் இருந்தும், அவர்கள் ஒப்புதலோடு தொழில்முனைவோர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தொழில் முனைவோருக்கு 3 லட்சம் ரூபாயும், கூட்டுறவுச் சங்கமாக இருந்தால் 2 லட்சம் ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது. உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரொக்கமாகவும், மருந்துகளாவும் வழங்கப்பட்டிருக்கிறது.
அத்துடன், முதல்வர் மருந்தகங்களுக்கு தேவைக்கு ஏற்ப உடனடியாக அனுப்புகின்ற வகையில் மாவட்ட மருந்து கிடங்குகளில் 3 மாதத்துக்கு தேவையான மருந்துகளின் இருப்பு பராமரிக்கப்படுகிறது. சாலிகிராமத்தில், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் மத்திய மருந்து கிடங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. 38 மாவட்டங்களில், மாவட்ட மருந்து கிடங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட மருந்து கிடங்குகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளான ஏசி, குளிர்சாதனப்பெட்டி, ரேக்குகள் மற்றும் கணினி என்று எல்லா வசதிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது.
மருந்து தேவைப்பட்டியல் பெறப்பட்ட 48 மணி நேரத்தில், மருந்துகளை வாகனங்கள் மூலம் இந்த முதல்வர் மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்க வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக பணியாற்றும் வகையில் மருந்தாளுநர் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், பி.பார்ம், டி.பார்ம் படித்த ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த முதல்வர் மருந்தகங்களில் சிறப்பு என்னவென்று கேட்டால், முதல்வர் மருந்தகங்களில் 75 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தனியார் மருந்தகங்களில் மருந்துகளை வாங்குபவர்கள், இனிமேல் முதல்வர் மருந்தகங்களில் குறைவான விலையில் மருந்துகளை வாங்கி பயன்பெற முடியும். இதனால், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புக்கு ஆளாகியிருக்கக் கூடியவர்களுக்கு மருந்துகளை குறைந்த விலையில் முதல்வர் மருந்தகங்களிலேயே வாங்கி பயன்பெற முடியும்.
நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, கொரோனா என்கிற பெரும் நோய்த்தொற்று பரவியிருந்த காலம். அப்போது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு பல சிறப்பு முயற்சிகளை எடுத்தோம். வாரந்தோறும் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தி, எந்தளவுக்குச் சிறப்பாக செயல்பட்டு கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்தினோம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.
நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தப்போது, தடுப்பூசிக்கு தகுதியானவர்களில் 8.09 விழுக்காடு மக்களுக்காகதான் முதல் தவணை தடுப்பூசியும், 2.84 விழுக்காடு மக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டிருந்தது. ஆனால், நம்முடைய சீரிய முயற்சிகளால், ஏழே மாதங்களில் இந்த நிலையை மாற்றி, 86.95 விழுக்காடு மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 60.71 விழுக்காடு மக்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் என்று 8 கோடியே 55 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டது. ஓராண்டுக்குள் எல்லோரும் இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டு, பூஸ்டர் தடுப்பூசியும் போட்டு மக்களை காப்பாற்றினோம்.
குழந்தைகள், மாணவர்கள், மகளிர், இளைஞர்கள், முதியவர்கள் என்று ஒவ்வொரு மக்களின் தனித்தனி தேவைகளை உணர்ந்து, பார்த்து, பார்த்து செய்து தருகிறோம். இந்த அணுகுமுறையால்தான் சமூக வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாக இன்றைக்கு வளர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி, பாலினச் சமத்துவம், தூய்மையான குடிநீர் குறைந்த விலையில், வேலைவாய்ப்பு, பொருளாதார குறியீடு, தொழில் உட்கட்டமைப்பு, சம வாய்ப்புகள், அமைதி, மருத்துவம், மக்கள் நல்வாழ்வு நுகர்வு உற்பத்தி என்று எல்லா குறியீடுகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
இதெல்லாம் நமக்கு நாமே வாசித்துக்கொள்ளும் பாராட்டுப் பத்திரங்கள் கிடையாது. மத்திய அரசின் நிதி ஆயோக் புள்ளிவிவரங்களே சொல்கிறது, நாட்டுக்கே முன்மாதிரியாக வழிகாட்டியாக இருக்கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், காலை உணவுத் திட்டம் என்று முற்போக்கான தொலைநோக்கான நாட்டுக்கே முன்னோடியான அத்தனை திட்டங்களையும் பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு இடையில் தான் செயல்படுத்தி வருகிறோம்.
மத்திய அரசின் நெருக்கடி இருந்தாலும், அந்த நெருக்கடிக்களுக்கு மத்தியிலும், அது பற்றி கவலைப்படாமல் தமிழக நலன்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு, தமிழக மக்கள் மேல் நம்பிக்கை வைத்து இந்த திட்டங்களை நாங்கள் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இது எல்லாவற்றையும் மக்களுக்கான நம்முடைய கடமை என்று உணர்ந்து செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
மக்களுக்கு நன்மை செய்வதில் நாம் கணக்கு பார்ப்பதில்லை. இந்த நேரத்தில் நான் அரசு அதிகாரிகளுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், இந்த முதல்வர் மருந்தகங்கள் என்ன நோக்கத்துக்காக தொடங்கப்பட்டிருக்கிறதோ அந்த நோக்கம் கொஞ்சம் கூட சிதையாமல் இன்னும் சிறப்பாக செயல்படுத்துகின்ற அந்த உறுதியை நீங்கள் எடுத்துக் கொள்ளவேண்டும். இப்போது திறக்கப்பட்டிருக்கும் ஆயிரம் மருந்தகங்கள் என்பது, முதல் கட்டம்தான். அடுத்தடுத்த கட்டங்களில், இந்த எண்ணிக்கையை அதிகரிக்கப் போகிறோம்.
ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்தத் திட்டத்துக்கு மற்றொரு நோக்கமும் இருக்கிறது. பி.பார்ம், டி.பார்ம் படித்த இளைஞர்களை சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான அடித்தளம் அமைப்பதுதான் அந்த நோக்கம். நான் முதல்வனால், இளைஞர்களின் திறன் வளர்க்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு இதுபோன்ற திட்டங்களால் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக்கி வருகிறது என்று முதல்வர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இரும்பு மனிதர் தமிழக முதல்வர் ஸ்டாலின் : அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
24 Feb 2025சென்னை : மத்திய அரசிடம் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இரும்பு மனிதராக முதல்வர் இருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-02-2025
24 Feb 2025 -
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது 2025-26-ம் ஆண்டு பட்ஜெட் குறித்து ஆலோசனை
24 Feb 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
-
சூரியன்.ஜி இயக்கும் டெக்ஸ்டர்
24 Feb 2025ராம் எண்டர்டெயினர்ஸ் பிரகாஷ்.எஸ்.வி தயாரிப்பில், சூரியன்.ஜி இயக்கத்தில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் படம் ‘டெக்ஸ்டர்’ (DEXTER).
-
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - விமர்சனம்
24 Feb 2025காதலில் தோல்வியடைந்த நாயகன் பவிஷ்க்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்க்கிறார்கள். ஆனால், பவிஷ் பிரிந்த காதலியை மீண்டும் பார்க்க செல்கிறார்.
-
அரசு பொதுத் தேர்வை முன்னிட்டு அடுத்த 2 மாதங்கள் மின்தடை இருக்காது: தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு
24 Feb 2025சென்னை, மாணவர்கள் அரசு பொதுத் தேர்வு எழுதுவதை முன்னிட்டு, அடுத்த 2 மாதங்களுக்கு மின்தடை செய்யக் கூடாது என பொறியாளர்களுக்கு, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
-
கவுதமை பாராட்டிய ஆர்யா
24 Feb 2025லப்பர் பந்து படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிச்சர்ஸ் S.
-
தென்காசி மாவட்டத்துக்கு 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை
24 Feb 2025கன்னியாகுமரி : சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி அவதார நாளையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறி
-
இரட்டை இயந்திர அரசிலால் ம.பி. வளர்ச்சியின் வேகத்தை இரட்டிப்பு : பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Feb 2025போபால் : மாநிலத்தில் இரட்டை இயந்திர அரசு அமைக்கப்பட்ட பிறகு மத்திய பிரதேசத்தின் வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாகியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
தர்மபுரி அருகே பயங்கரம்: பட்டாசுகிடங்கில் தீ விபத்து: 3 பெண்கள் பரிதாபமாக பலி
24 Feb 2025தர்மபுரி : தர்மபுரி அருகே பட்டாசு கிடங்கி பயங்கிர தீ விபத்து ஏற்பட்டது, இதில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
-
நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் திடீர் விலகல்
24 Feb 2025சென்னை : நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விலகினார்.
-
ராமம் ராகவம் விமர்சனம்
24 Feb 2025நேர்மையான அரசு அதிகாரியான சமுத்திரக்கனியின் மகன் தனராஜ் கொரனானி, சிறு வயதில் இருந்தே சரியாக படிக்காமல் ஊர் சுற்றி ஊதாரியாக வளர்கிறான்.
-
மாநில எல்லைகளில் அரிசி கடத்தலை தடுக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்
24 Feb 2025சென்னை, மாநில எல்லையோரங்களில் அரிசிக் கடத்தலைத் தடுத்திட கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று உணவுத்துறை உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் சக
-
தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டதாக புகார்: டெல்லி சட்டசபை முதல் நாள் கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளி
24 Feb 2025புதுடெல்லி : டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு உள்ளதாக கூறி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை
-
குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர் அஞ்சுகின்றனர்: இ.பி.எஸ்.
24 Feb 2025சென்னை : அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக இருந்தது. தி.மு.க.
-
அ.தி.மு.க.வின் தோல்விக்கு ஒற்றை தலைமையே காரணம் : ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு
24 Feb 2025சென்னை : அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்க ஒற்றைத் தலைமையே காரணம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.
-
அரசு பள்ளிகளுக்கான இணைய கட்டணம்: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு
24 Feb 2025சென்னை : அரசு பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
77-வது பிறந்த நாள் விழா: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு இ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை
24 Feb 2025சென்னை, 77-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு இ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க.
-
உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: சிறுநீரக பிரச்சினையால் போப் பிரான்சிஸ் அவதி
24 Feb 2025ரோம் நகர் : போப் பிரான்சிஸ் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்குவதே அரசின் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Feb 2025சென்னை, தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம் என்று முதல்வர் மருந்தகம் திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்ட
-
தங்கம் விலை தொடர்ந்து உயர்வு
24 Feb 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்து விற்பனையானது.
-
பா. விஜய் இயக்கத்தில் அகத்தியா
24 Feb 2025வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்துள்ள படம் அகத்தியா. பாடலாசிரியர் - நடிகர் - இயக்குநர் பா.
-
நிறம் மாறும் உலகில் அம்மாவை பற்றிய படம்
24 Feb 2025சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் தயாராகி, மார்ச் 7 அன்று வெளியாகும் படம் 'நிறம் மாறும் உலகில். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட
-
டிராகன் விமர்சனம்
24 Feb 2025நன்றாக படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, வாழ்க்கையில் முன்னேறினால் காதல் மட்டுமல்ல சகலமும் நம்மை தேடி வரும் என்ற அறிவுரையை எடுத்துக் கூறும் படம்தான் டிராகன்.
-
தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை யாராலும் புகுத்த முடியாது: அமைச்சர்
24 Feb 2025விழுப்புரம் : மும்மொழி கொள்கையை தமிழகத்தில் யாராலும் புகுத்த முடியாது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.