முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெடுஞ்சாலை மதுக்கடைகளை வரும் 13-ம் தேதிக்குள் அகற்ற முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு

புதன்கிழமை, 5 மார்ச் 2025      இந்தியா
Yogi 1

Source: provided

புதுடெல்லி : உத்தரப் பிரதேச மாநிலத்தின் எக்ஸ்பிரஸ்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்களை வருகிற 13-ம் தேதிக்குள் அகற்ற முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.

பா.ஜ.க. ஆளும் உ.பியின் முதல்வரான துறவி யோகி, உ.பி மாநில சாலைகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கூட்டினார். இதில் சாலை விபத்துக்களுக்கு காரணமான பல பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதையடுத்து அவர் நேற்று தனது நிர்வாகத்தில் சில புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதில் முக்கியமாக மது விற்பனையில் பல புதிய மாற்றங்கள் வெளியாகி உள்ளன.

முதல்வர் யோகியின் புதிய உத்தரவில் கூறியிருப்பதாவது: பல இடங்களில் மதுபானங்கள் தொடர்பான விளம்பரங்கள் மிகப்பெரிய பேனர்களில் வைக்கப்பட்டுள்ளன. இனி இவை பெரிதாக அன்றி, சிறிய அளவுகளில் வைக்கப்பட வேண்டும். எக்ஸ்பிரஸ்வே சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்களை அகற்ற வேண்டும். இந்த மாற்றங்கள் ஹோலி பண்டிகைக்கு முன்பாக செய்யப்பட வேண்டும்.

சாலைகளில் மது அருந்தி வாகனம் ஓட்டுதல், அதிவேகம், தடைசெய்யப்பட்டப் பாதைகளில் செல்வது, கைப்பேசிகளில் பேசியபடி ஓட்டுதல், சிக்னல்களை மதிக்காமை போன்றவற்றால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதை தடுப்பதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவது அவசியம். சாலைகளில் ஆம்புலன்ஸ் வசதி மற்றும் மாவட்ட தலைநகரங்களில் பயிற்சிபெற்ற மருத்துவ பணியாளர்களுடனான மருத்துவமனைகள் உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து