முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் மாட்டிறைச்சி உற்பத்தி, ஏற்றுமதி அதிகரிக்கும்: அமெரிக்கா

புதன்கிழமை, 5 மார்ச் 2025      உலகம்
America 2024-04-22

Source: provided

அமெரிக்கா : மாட்டிறைச்சி உற்பத்தி, ஏற்றுமதியை நடப்பாண்டில் இந்தியா அதிகரிக்கும் என அமெரிக்க அரசின் விவசாயத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசின் விவசாயத்துறை மாட்டிறைச்சி ஏற்றுமதி பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் மாட்டிறைச்சி உற்பத்தி கடந்த 2024-ம் ஆண்டில் 45.7 லட்சம் டன்களாக இருந்தது. இது இந்தாண்டு 46.4 லட்சம் டன்களாக உயருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, ஏற்றுமதி 15.6 லட்சம் டன்களில் இருந்து 16.4 லட்சம் டன்களாக உயருமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2025-ல் உலகிலேயே அதிகமாக இந்தியாவில் 30 கோடியே 75 லட்சம் மாடுகளும், எருமைகளும் கால்நடைகளாக வளர்க்கப்படுகின்றன.

இதில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகளின் எண்ணிக்கை கடந்த 2024-ல் 4.09 கோடியில் இருந்தது. இது இந்தாண்டு 4.14 கோடியாக அதிகரிக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், உள்நாட்டு மாட்டிறைச்சி நுகர்வு 30 லட்சம் டன்களில் இருந்து 36 லட்சம் டன்களாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அரசின் மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகம் சார்பில் இறைச்சிக் கடைகள் அமைக்கவும், நவீனப்படுத்தவும் உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், தேசிய கால்நடை இயக்கம் மூலம் தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகின்றது.இந்தத் திட்டங்கள் விலங்குகளின் சுகாதாரம், இனப்பெருக்கம், தீவனம் வழங்குதல், தீவன உற்பத்தி, பால் கூட்டுறவுத் துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கியுள்ளது. இருந்தபோதிலும், இந்திய அரசு உயிருடன் விலங்குகளை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதி, உள்நாட்டு நுகர்வின் தேவை அதிகரிப்பதால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து