முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்கொலைக்கு முயன்ற பாடகி கல்பனாவுக்கு நினைவு திரும்பியது

புதன்கிழமை, 5 மார்ச் 2025      சினிமா
Kalpana 2025-03-05

Source: provided

சென்னை : பிரபல சினிமா பின்னணி இசை பாடகி கல்பனா (வயது 44). பல சினிமா பாடல்களை பாடியுள்ள இவர், சமீப காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வந்தார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகில் உள்ள நிஜாம் பேட்டை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வந்தார்.

கடந்த சில நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்குள்ள படுக்கை அறையில் கல்பனா சுயநினைவின்றி கிடந்ததாக தெரிகிறது.

உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கி கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட பாடகி கல்பனா, தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவரது தற்கொலை முயற்சிக்கான சரியான காரணம் தெளிவாக தெரியவில்லை. மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர். இவருடைய தந்தை டி.எஸ். ராகவேந்தர் ஒரு நடிகர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர். அவரது அம்மாவும் பின்னணி பாடகர். பாடகி கல்பனா ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து