முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித்தின் கிரிக்கெட் பயணம் குறித்து கவுதம் காம்பீர் பதில்

புதன்கிழமை, 5 மார்ச் 2025      விளையாட்டு
Gambhir 2023 09 14

Source: provided

துபாய் : இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் குறித்து காம்பீர் பதிலளித்துள்ளார்.

எதிர்காலம் என்ன?

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வருகிறார். அவருடைய ஃபார்ம் கவலை அளிக்கும் வகையில் இருப்பதாக ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் விமர்சிக்கப்பட்டது. இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் அவரது எதிர்காலம் என்ன என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன? என்பது குறித்து பிசிசிஐ ரோகித் சர்மாவிடம் கேட்டதாக தகவல் வெளியானது.

காம்பீரிடம் கேள்வி...

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா அபாரமாக செயல்பட்டு வருகிறது. அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. போட்டிக்குப்பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் "ரோகித் சர்மாவின் ஃபார்ம், அவர் இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை பற்றி சொல்லுங்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.

தைரியமான அணுகுமுறை...

அதற்கு கவுதம் காம்பீர்  பதில் கூறியதாவது:- சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக நான் என்ன சொல்ல முடியும்?. நாங்கள் முற்றிலும் பயமில்லாத மற்றும் தைரியமான அணுகுமுறையை விரும்புகிறோம். கேப்டன் இதுபோன்ற துடிப்புடன் பேட்டிங் செய்யும்போது, டிரெஸ்ஸில் ரூமில் சிறந்த சிக்னலை கொடுக்கிறது. நீங்கள் ரன்களை வைத்து மதிப்பீடு செய்கிறீர்கள். நாங்கள் விளையாட்டில் ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்து மதிப்பீடு செய்கிறோம். இதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் இடையிலான வேறுபாடு.

ஒரே கேப்டன் என்ற.... 

நீங்கள் புள்ளி விவரங்களை வைத்து மதிப்பீடு செய்கிறீர்கள். நாங்கள் அப்படியில்லை. அவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்து மதிப்பீடு செய்கிறோம். நாங்கள் நம்பர் அல்லது சராசரியை பார்ப்பதில்லை. கேப்டன் முதன் நபராக தன்னுடைய கையை தூக்கும்போது (செயல்பாட்டில் முதன் நபராக இருக்கும்போது) டிரெஸ்ஸிங் ரூமில் அதைவிட சிறந்ததாக ஏதும் இருக்க முடியாது" என்றார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி-யின் நான்கு தொடர்களிலும் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து