முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி டி-20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசி., அபார வெற்றி

புதன்கிழமை, 26 மார்ச் 2025      விளையாட்டு
New-Zealand 2024-02-16

Source: provided

வெல்லிங்டன் : கடைசி டி-20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

சுற்றுப்பயணம்... 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் 4 போட்டிகள் முடிவில் 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

சல்மான் ஆகா... 

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சல்மான் ஆகா 51 ரன்கள் எடுத்தார்.

டிம் செய்பர்ட்... 

நியூசிலாந்து தரப்பில் ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 129 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக டிம் செய்பர்ட் மற்றும் பின் ஆலென் களம் இறங்கினர். இதில் பின் ஆலென் 27 ரன்னிலும், மார்க் சாம்ப்மென் 3 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து டேரில் மிட்செல் களம் புகுந்தார். மறுபுறம் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் செய்பர்ட் சிக்சர் மழை பொழிந்தார். 

131 ரன்கள் எடுத்து..

இதன் காரணமாக நியூசிலாந்து அணி வெறும் 10 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டிம் செய்பர்ட் 97 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் 29ம் தேதி நடக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து