முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      தமிழகம்
EPS-Photo-1-2025-03-27

 திருநெல்வேலி, அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.கருப்பசாமி பாண்டியனின் உடலுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த திருத்து பகுதியில் உடல்நலக் குறைவு காரணமாக கருப்பசாமி பாண்டியன் நேற்று முன்தினம் காலை காலமானார்.

இந்த நிலையில், டில்லியில் இருந்து திரும்பிய எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க.  பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, கருப்பசாமி பாண்டியனின் உடலுக்கு நேற்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி கடம்பூர் செ. ராஜு, அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா, திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் தச்சை என். கணேசராஜா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:

கருப்பசாமி பாண்டியன்  எம்.ஜி.ஆர். மீது மிகுந்த மரியாதை கொண்டவர். கட்சியை உயிராக நேசித்தவர். எம்.ஜி.ஆர். காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். மாவட்டச் செயலராக இருந்தவர். ஜெயலலிதா காலத்தில் துணைப் பொதுச்செயலராக திறம்பட பணியாற்றியவர். தென் மாவட்ட மக்களும் அ.தி.மு.க. வினரும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அ.தி.மு.க. வின் தூணாக விளங்கியவர்.   அவருடைய இழப்பு அ.தி.மு.க. விற்கு பேரிழப்பாகும்  என்றார்.

முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து