எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : அடுத்த தமிழ்நாடு முதல்வர் யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து சி வோட்டர் நிறுவனம் இந்தியா டுடே நிறுவனத்துடன் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த கருத்து கணிப்பின்படி தற்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று 27 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதிதாக கட்சி தொடங்கி முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் 2026-ல் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று 18 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு இந்த பட்டியலில் மூன்றாவது இடமே கிடைத்துள்ளது. தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த அக்கட்சியின் தலைவர் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று 10 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தாமரையை மலரவைக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ள பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு ஆதரவாக 9 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கட்சி தொடங்கி ஓர் ஆண்டுகாலமே ஆகி உள்ள நிலையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதபொருளாக மாறி உள்ளது.
மேலும் இந்த கருத்துக்கணிப்பில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது..? என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழ்நாடு அரசின் செயல்பாடு மிகவும் திருப்தியாக உள்ளது என 15 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆளும் தி.மு.க. அரசின் ஆட்சி ஓரளவு திருப்தியாக உள்ளது என 36 சதவீதம் பேர் கூறியுள்ளனர். திருப்தி இல்லை என்று 25 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் எந்த கருத்துக்கும் வர முடியாதவர்கள் 24 சதவீதம் பேர் உள்ளனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என கேட்கப்பட்டதற்கு 22 சதவீதம் பேர் "நன்றாக உள்ளது" என்றும், 33 சதவீதம் பேர் "ஓரளவுக்கு திருப்தி" என்றும் தெரிவித்தனர். இதற்கிடையில், 22 சதவீதம் பேர் "எந்த விதத்திலும் திருப்தி அடையவில்லை" என்றும், 23 சதவீதம் பேர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். ஸ்டாலின் மிகவும் விரும்பப்படும் தலைவராக இருந்தாலும், அவரது ஆட்சியில் பொதுமக்களின் திருப்தி கலவையாக இருப்பதை இது காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செயல்திறன் குறித்த பொதுமக்களின் கருத்தையும் இந்த கணக்கெடுப்பு பிரதிபலித்தது. அதன்படி 8 சதவீதம் பேர் மட்டுமே "மிகவும் திருப்தி" என்றும், அதே நேரத்தில் 27 சதவீதம் பேர் "ஓரளவுக்கு திருப்தி" என்றும், இதற்கு நேர்மாறாக, 32 சதவீதம் பேர் "எந்த விதத்திலும் திருப்தி அடையவில்லை" என்றும், 33 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமைக்கு வலுவான விருப்பம் இருப்பதாக இந்த கருத்து கணிப்பு முடிவுகள் குறிப்பிடுகின்றன, அவருக்கான மதிப்பீடு மற்ற போட்டியாளர்களை விட கணிசமான அளவில் முன்னிலையில் உள்ளது. இருப்பினும், விஜய் இரண்டாவது இடத்தில் இருப்பது நடிகரின் அதிகரித்து வரும் அரசியல் ஈர்ப்பை எடுத்துக்காட்டுவதக உள்ளது. இருப்பினும் அவரது கட்சி இன்னும் முறையான தேர்தலில் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் வாக்குகளைப் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து கேட்டபோது, பதிலளித்தவர்கள் பெண்களின் பாதுகாப்பை 15 சதவீதம் பேர் முக்கிய கவலையாக குறிப்பிட்டனர், அதைத் தொடர்ந்து 12 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு. 10 சதவீத வாக்காளர்கள் போதைப்பொருள் மற்றும் மது அருந்துதல் ஒரு முக்கிய பிரச்சினையாக அடையாளம் காட்டி உள்ளனர். அதே நேரத்தில் வேலையின்மை 8 சதவீதம் பேர் மேற்கோள் காட்டினர்.
சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்திறன் குறித்த பொதுமக்களின் கருத்தும் இதேபோல் பிரிக்கப்பட்டது. பதிலளித்தவர்களில் 16 சதவீதம் பேர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் "மிகவும் திருப்தி அடைவதாகக்" கூறியிருந்தாலும், 32 சதவீதம் பேர் "ஓரளவுக்கு திருப்தி என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், 25 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்தனர், 27 சதவீதம் பேர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
தமிழக அரசியலில் மு.க.ஸ்டாலின் ஆதிக்கம் செலுத்தும் தலைவராக இருந்தாலும், ஆட்சி குறித்த பொதுமக்களின் கவலைகள் அதிகரித்து வருவதும், தீவிர போட்டியாளராக விஜய் எதிர்பாராத விதமாக உயர்ந்திருப்பதும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மாநில அரசியல் சூழலை மாற்றியமைக்கக்கூடும் என்று கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 5 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-04-2025.
03 Apr 2025 -
வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்
03 Apr 2025புதுடெல்லி, வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசினார்.
-
அன்னை இல்லம் விவகாரம்: ராம்குமாருக்கு உதவ முடியாது: நடிகர் பிரபு தரப்பு கைவிரிப்பு
03 Apr 2025சென்னை, நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு விசாரணையில், ராம்குமாருக்கு உதவ நடிகர் பிரபு தரப்பில் மறுப்புத்
-
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஐகோர்ட் கிளை தடை: ஐ.ஐ.டி. குழு ஆய்வு செய்ய உத்தரவு
03 Apr 2025தென்காசி, கோவில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
தாய்லாந்தில் முகமது யூனுஸுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை
03 Apr 2025பாங்காக், தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பிம்ஸ்டெக் உச்சிமாட்டின் இடையே வங்கதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத
-
அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்படும்: மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி
03 Apr 2025புதுடெல்லி, அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பு குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
-
குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம்
03 Apr 2025புதுடெல்லி, வக்பு சொத்துகளை அபகரித்ததாக குற்றம்சாட்டிய அனுராக் தாகுர் அதனை நிரூபிக்க வேண்டும்.
-
திருவல்லிக்கேணி அரசுப் பள்ளியில் ரூ.3.65 கோடியில் புதிய கட்டிடங்கள்: துணை முதல்வர் திறந்து வைத்தார்
03 Apr 2025சென்னை, திருவல்லிக்கேணி அரசுப் பள்ளியில் ரூ.3.65 கோடியில் புதிய கட்டிடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷம்
03 Apr 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து தலைமைச் செயலக வளாகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர்.
-
தமிழகத்தில் மேலும் 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு
03 Apr 2025சென்னை, பண்ருட்டி பலாப்பழம் உட்பட தமிழகத்தில் மேலும் ஆறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
-
ஸ்ரீரங்கம் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
03 Apr 2025ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா கொடியேற்றம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
-
அரசியலமைப்பு மீதான தாக்குதல்: வக்பு திருத்த மசோதாவுக்கு சோனியா காந்தி எதிர்ப்பு
03 Apr 2025புதுடெல்லி: வக்பு சட்டத் திருத்த மசோதா-2025 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் நேற்று நள்ளிரவில் நிறைவேறியது.
-
ஆன்மீகத்தோடு தொடர்புடையது:தாய்லாந்துடனான உறவு குறித்து பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்
03 Apr 2025பாங்காக்: ராமாயணம் உண்மையிலேயே ஆசியாவின் பல பகுதிகளில் உள்ள இதயங்களையும் பாரம்பரியங்களையும் இணைக்கிறது என்று தெரிவித்த பிரதமர் மோடி தாய்லாந்துடனான உறவு ஆன்மீகத்தோடு தொட
-
நிர்மலா சீதாராமனுடன் தம்பிதுரை எம்.பி திடீர் சந்திப்பு மத்திய அமைச்சர் பதவிக்காக சந்திப்பா? அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை விளக்கம்
03 Apr 2025சென்னை, மத்திய அமைச்சர் பதவிக்காக நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்
03 Apr 2025புதுடெல்லி: மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவதற்கான தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
-
சாய் சுதர்ஷனுக்கு பாராட்டு
03 Apr 2025அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் சாய் சுதர்ஷனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தமிழக வீரர்...
-
சட்டசபைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகை
03 Apr 2025சென்னை: தமிழக சட்டசபைக்கு தி.மு.க. உறுப்பினர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்தனர்.
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஓரு தங்க ஆபரணம் கண்டெடுப்பு
03 Apr 2025விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஓரு தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
-
ஏப்ரல் 11-ல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா
03 Apr 2025ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா நேற்று காலை 11 மணிக்கு கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
உயிரோடு தான் இருக்கிறேன்: யூடியூப் நேரலையில் தோன்றி சாமியார் நித்யானந்தா விளக்கம்
03 Apr 2025அகமதாபாத்: பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் கர்நாடகா மற்றும் அகமதாபாத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடினா
-
தமிழகத்திற்கு நிதி பெறுவது தொடர்பாக பிரதமர் மோடியைஅமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பார் துணை முதல்வர் உதயநிதி தகவல்
03 Apr 2025சென்னை: தமிழகத்திற்கு நிதி பெறுவது தொடர்பாக பிரதமர் மோடியைஅமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 16 நாள்கள் விடுமுறை
03 Apr 2025மும்பை, நாட்டில் உள்ள வங்கிக ளுக்கு 2025 ஏப்ரல் மாதத்தில் 16 நாள்கள் விடுமுறை வருகிறது.
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காஸாவில் 50-க்கும் மேற்பட்டோர் பலி
03 Apr 2025காஸா: காஸா மீது நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 55 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மும்பை வீரருக்கு அழைப்பு
03 Apr 2025ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல நகரங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
-
தாய்க்கு பதிலாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மகள்
03 Apr 2025நாகப்பட்டினம்: தாய்க்கு பதிலாக 10-ம் வகுப்பு தேர்வெழுதிய மகள் பிடிபட்டார்.