தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      தமிழகம்
Sri Rangam Trichy

Source: provided

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா கொடியேற்றம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை வருகிற 11-ம் தேதி நடைபெறுகிறது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் என்றபோதும், ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டிற்கான பங்குனித் தேர் திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். கருடாழ்வார் வரையப்பட்ட பெரியக் கொடி மற்றும் கொடிமரத்திற்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து, மீன லக்னத்தில் கொடியை ஏற்றி வைத்தனர். நேற்று துவங்கி தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் பங்குனி உற்சவ திருவிழாவில், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஆண்டுக்கொரு முறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள்- உறையூர் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை வருகிற 8-ம் தேதியும், நம்பெருமாள்- ஸ்ரீரங்க நாச்சியார் சேர்த்தி சேவை வருகிற 11-ம் தேதியும், கோரதம் எனப்படும் பங்குனித் தேரோட்டம் ஏப்.12-ம் தேதியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம் குமார், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து