முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புகைபிடிப்பதை கைவிடுவது எப்படி

இந்தியாவில் புகைப்பழக்கத்திற்கு அடிமையான 10 லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணத்தை தழுவுவதாக இந்திய அரசு கூறுகிறது. 2016-17ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி (Global Adult Tobacco Survey), இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கும் அதிகம். புகை பழக்கத்தை விட சில யோசனைகள்...காலை எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் வெந்நீரில் எலுமிச்சம் பழ ரசத்தை கலந்து பருகவேண்டும். அதில் சுவைக்காக தேன் சேர்த்துக் கொள்ளலாம். புகைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம், "சிகரெட் பிடிக்கக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்" என்ற உங்கள் இலக்கை திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். புகைப்பழக்கத்தில் இருந்து விலகவேண்டும் என்ற விருப்பம் உங்கள் உள் மனதில் ஏற்படவேண்டியது அவசியம். அத்துடன் கால வரையறையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். புகைப்பிடிக்கும் இச்சை அதிகமானால், அமைதியாக அமர்ந்து, மூச்சை ஆழமாக இழுத்துவிடவும். தண்ணீர் குடிக்கவும், இப்படிச் செய்வதால் உங்கள் கவனமும், இலக்கும் ஒன்றிணையும்.இஞ்சி மற்றும் நெல்லிக்காயை இடித்து காயவைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எலுமிச்சை ரசம் மற்றும் உப்பு சேர்த்து, அதை எப்போதும் உங்களுடனே வைத்திருங்கள். சிகரெட் புகைக்கவேண்டும் என்று தோன்றும்போது, இஞ்சி, நெல்லிக்காய், எலுமிச்சை கலவையை சாப்பிடவும். இதைத்தவிர, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை சாப்பிடலாம் அல்லது அவற்றின் பழரசங்களை குடிக்கலாம். இது புகைப்பிடிக்கும் வேட்கையை அடக்கும்.

எரிமலையில் கொடி

இந்தோனேஷியாவில் புகைந்து கொண்டிருக்கும் டுகோனு எரிமலை பகுதிக்கு தைரியமாகச் சென்ற ஐதராபாத்தை சேர்ந்த சாய் தேஜா என்ற இளைஞர் எரிமலையில் தேசிய கொடியை பறக்க செய்தும், அதனை வீடியோ பதிவு செய்தும் சாதனை படைத்திருக்கிறார்.  உள்ளூர் மக்களின் உதவியோடு சாதனை படைத்த அவர், இந்த பயணம் மனநிறைவை அளித்ததாக தெரிவித்துள்ளார்.

உயிரினங்களில் கருத்தரிக்கும் ஆண் உயிரி எது தெரியுமா?

உயிரினங்களில் பெரும்பாலும் அனைத்துமே பெண் இனமே கருத்தரிக்கின்றன. ஆனால் ஒன்றே ஒன்றை தவிர. அது கடல் குதிரை. இது ஒருவகை மீன் இனமாகும். கடல் குதிரைகள், பச்சோந்தியைப் போல நிறம் மாறும் தன்மை கொண்டவை. ஆனால் இவை தன்னுடைய ஜோடியைக் கவர்வதற்காக மட்டுமே தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்கின்றன. ஆண், பெண் என இரண்டு கடல் குதிரைகளுமே தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்ளும். கடல் குதிரையில் ஆண்தான் தன்னுடைய குஞ்சுகளை பொரிக்கும். பெண் கடல் குதிரை, ஒரே நேரத்தில் 200 முட்டைகள் வரை, ஆண் கடல் குதிரையின் கருப்பை மீது இடும். அந்த முட்டைகள் மீது, ஆண் கடல் குதிரை தன்னுடைய விந்தணுவை தெளித்து இனப்பெருக்கம் செய்கின்றன. இதற்காக ஆண் கடல் குதிரையின் வாலின் கீழ் பகுதியில் ஒரு பை இருக்கும். சுமார் 50 முதல் 100 குஞ்சுகளே பொரிந்து முழுமையாக வெளிவருகின்றன.

தேனீக்கள் : ஒரு லிட்டில் ஸ்டோரி

ஓய்வில்லா உழைப்புக்கு மட்டுமல்ல சுறுசுறுப்பு, கட்டுப்பாடு, கூட்டு முயற்சி ஆகியவற்றிக்கு தேனீயே அடையாளமாக இருக்கின்றது ஆண்டொன்றுக்கு 450 கிலோ மலரின் குளுக்கோஸ், புரோபோலிஸ் எனப்படும் பிசின், நீர் மற்றும் மகரந்தத்தை முன்கூட்டியே சேமித்துக் கொள்கிறது. எனவே உணவுப் பதப்படுத்துவதில் முன்னோடியும் தேனீதான். தேனீக்கள் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கின்றன. பெரும்பாலும் கிழக்கு ஆசியாவில் தோன்றியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  மொத்தம் 44 இனங்கள் உள்ளன. அறிவியலில் ஏப்பிடே (Apidae) எனும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) எனும் இனத்தைச் சார்ந்தவை தேனீக்கள். மனிதனைப் போலவே தேனீக்களும் கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் 30 முதல் 40 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும். தேனீக்களில் முதல் வகை இராணித் தேனீ. இதுதான் தேனீக்களில் மிகப் பெரியது. தலைமை வகிக்கும். இதன் ஆயுள் 3 ஆண்டுகள். இதன் வேலை இனப்பெருக்கம் செய்வது. 2 ஆவது ஆண் தேனீ. இதன் வேலை கூட்டை பராமரிப்பது, ராணித் தேனீயை கவனித்துக் கொள்வது. 3ஆவது வேலைக்காரத் தேனீ. ஒரு தேனீக் கூட்டத்தில் இதுதான் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இதன் வேலை உணவு சேகரிப்பது, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது போன்ற முக்கியமான அனைத்தையும் செய்யும். இதன் ஆயுள் 2 மாதங்கள். செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அண்மைக் காலமாக தேனீக்கள் வேகமாக அழிந்து வருவது வேதனைக்குரியதுதானே..

கோழிகள் காது மடல்களின் நிறத்திலேயே முட்டை இடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

கோழிகளுக்கு வெளிப்புறமாக தெரியும் வகையில் காதுகள் இல்லாவிட்டாலும், அவைகளுக்கும் காது மடல்கள் உள்ள. கோழிகளின் இனங்களை பொறுத்து காது மடல்களின்  வண்ணங்களும் அதற்கேற்ப மாறுபட்டு காணப்படும். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இது வழக்கமானதுதான். ஆனால் கோழிகள் தங்களின் காது மடல்களின் வண்ணத்திலேயே முட்டையிடும் என்பதுதான் ஆச்சரியம். வெள்ளை மடலை கொண்ட கோழி வெள்ளை முட்டையையும், அடர் வண்ணத்தை கொண்ட கோழி அடர் வண்ணத்திலும் முட்டையிடும் என்றால் அது ஆச்சரியம் தானே... இனி முட்டையை பார்க்கும் போது கூடவே உங்களுக்கு கோழிகளின் காது மடலும் நினவைுக்கு வரக் கூடும். ஆனால் ஒரே மாதிரி வெள்ளை வெளேரென முட்டையிடும் பிராய்லர் கோழிகளுக்கு இந்த விதி  பொருந்தாது என்பதை மறந்து விட வேண்டாம்.

பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் வினோத கிராமம்

வடகிழக்கு மாநிலத்தின் மிகப்பெரிய மாநிலமான அஸ்ஸாம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. ஆனால், இந்த மாநிலத்தின் பல விஷயங்கள் மிகவும் மர்மமானவை. இந்த மாநிலத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் இடம் உள்ளது. டிமா ஹாசோ மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள ஜதிங்கா பள்ளத்தாக்கு பறவைகளின் தற்கொலை ஸ்தலமாக அறியப்பட்டு மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில், பறவைகளின் தற்கொலையால் ஜதிங்கா கிராமம் உலகின் வெளிச்சத்திற்கு வருகிறது. உள்ளூர் பறவைகள் மட்டுமின்றி, புலம்பெயர்ந்த பறவைகளும் இங்கு வந்து தற்கொலை செய்துகொள்வதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இது போன்ற சம்பவம் 1901ம் ஆண்டு முதல் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் வெளியுலகம் 1957ல்தான் இதுபற்றி அறிந்தது. இந்த சம்பவம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் தீர்வு கிடைக்கவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago