முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கிளிகளைப் போல மிமிக்ரி செய்யும் பேபி சீல்கள்

தங்களது குரல்களை நேரத்துக்கு தக்கபடி மாற்றிக் கொள்ளும் பாலூட்டி விலங்கினங்களில் சீல்களும் ஒன்று. இவை பனி படர்ந்த துருவ பிரதேசங்களில் வாழ்பவை. அண்மையில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் குட்டி சீல்கள் தங்களது குரல்களை மாற்றிக் கொண்டு மனிதர்களைப் போலவும், கிளிகளைப் போலவும் சத்தம் எழுப்புவதை கண்டறிந்துள்ளனர். அவை தங்களது ஒரிஜினல் குரலை மாற்றி, மனிதர்களைப் போல, கிளிகளைப் போல மிமிக்ரி செய்வதாக அவர்கள் கூறுகின்றனர். தங்களது குரல்களை ஏற்ற இறக்கத்துடன் மாற்றத் தெரிந்த பாலூட்டி இனங்களில் சீல்களும் தற்போது இணைந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். நெதர்லாந்தில் உள்ள Max Planck Institute for Psycholinguistics என்ற ஆய்வகம்தான் தற்போது இந்த ஆய்வை கண்டறிந்துள்ளது. இதற்காக 1 முதல் 3 வாரங்கள் வரையிலான வயதுடைய 8 பேபி சீல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அதன் குரல்களை தொடர்ந்து பதிவு செய்து ஆய்வு செய்ததில் இவை தெரியவந்துள்ளது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்டுள்ள Wadden Sea பகுதியில்தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

குழந்தைக்கு எமன்

குழந்தைகள் வெளியில் விளையாடும் போது, அவர்களது உடல் மற்றும் மனம் வலிமையடைகிறது. அவர்களுக்கு ஒற்றுமையையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது. இதனால் அவர்கள் நீண்ட காலம் உடல் மற்றும் மன வலிமையுடன் இருக்க முடியும். இதற்கு மாறாக ஸ்மார்ட்போனை விளையாட கொடுத்தால் இதெல்லாம் அப்படியே தலைக்கீழாக மாறும். மேலும் உடல்ரீதியாக, மனரீதியாகவும் பாதிப்புகுள்ளாகின்றனர்.

நாள்தோறும் 200 உயிரினங்கள் அழிகின்றன

சூழல் மாசு உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 150-200 வகையான தாவரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சூழல் சமநிலை இழப்பால் டைனோசர்கள் அழிந்ததிலிருந்து தற்போது உலகம் எதிர் கொண்டு வரும் சூழல் அச்சுறுத்தல் முன்பை விட அதிகமாகும் என எச்சரிக்கின்றனர்.

பெண்களின் திறமை

ஒருவரின் கண்களை பார்த்து அவரது மனநிலையை அறிந்து கொள்ளும் மனரீதியான திறமை பெண்களிடம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபணு மாறுபாடு காரணமாக பெண்களுக்கு இத்தகைய திறமை உள்ளதாம். இதுகுறித்த ஆய்வில் பங்கேற்ற 89 ஆயிரம் பேரிடம் மனிதனின் கண்களை பார்த்து மனநிலையை அறியும் திறமை இருப்பது தெரிய வந்தது. மேலும், இந்த திறமை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் உள்ளது.

பூமியின் பிரதிபலிப்பு திறன் 0.5 சதவீதம் சரிவு

சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் சூரிய ஒளியை வாங்கி பிரதிபலிக்கின்றன என்பது நமக்குத் தெரியும். குறிப்பாக சூரியனை தவிர மற்ற எந்த கோள்களுக்கும் சுயமாக பிரகாசிக்கும் தன்மை கிடையாது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் சூரிய ஒளியை பூமி பிரதிபலிக்கும் தன்மை சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.கலிபோர்னியாவில் உள்ள பிக் பியர் சோலார் அப்சரவேட்டரி ஆய்வகத்தைச் சேர்ந்த பிலிப் கூடி தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் கடந்த 1998 முதல் 2017 வரையிலான பூமியின் பிரதிபலிப்பு திறன் குறித்த பல்வேறு தரவுகளை ஆய்வு செய்ததில் பூமியின் பிரதிபலிப்பு திறன் 0.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது என தெரிவிக்கின்றனர். அதிலும் கடந்த 3 ஆண்டுகளில் தான் அதிக அளவு சரிவு ஏற்பட்டதாகவும் அவர்களது ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தானியங்கி கார்

கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம், தானாகவே இயங்கும் ரோபோ கார் அறிமுகமாகியுள்ளது. சென்சார் மூலம் இந்த காரின் சக்கரங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. செயற்கைக் கோள் மூலம் கார் செல்லும் பாதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிக்கு 320 கி.மீ வேகத்துக்கு செல்லுமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago