முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தேநீர்தான் உணவு

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தலைவிரித்தாடும் பஞ்சத்தால் உண்ண உணவு கிடைக்காமல், வெறும் க‌றுப்புத் தேநீரை (பிளாக் டி)மட்டுமே பருகி உயிர்வாழ வேண்டிய நிலை அங்குள்ள மக்கள் இருக்கிறார்கள்.  பால் வழங்கிக் கொண்டிருந்த ஆடுகளும், மாடுகளும் வறட்சியால் இறந்துபோய் விட்டதால் இந்த நிலைமைக்கு அங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

யானையா? மனிதனா? வலுக்கும் மோதல்

மாறி வரும் சூழல் காரணமாக பல் உயிர் பெருக்க சுழற்சி மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு புவி வெப்பமயதால், கார்பன் எமிசன் என பலக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் இயற்கையின் அழிவுக்கு மனிதனின் பேராசை மட்டுமே காரணமாக இருக்க முடியும். இதனால் தென்னிந்தியாவில் மிகப் பெரிய பல்லுயிர் பெருக்க வன வாழ்விடமான மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகள் மிகுந்த அபாயத்தை எதிர் கொண்டுள்ளன. இதற்கு முக்கிய உதாரணமாக யானைகளுக்கும் மனிதனுக்கு ஏற்பட்டுள்ள முரண்களை சூழலியாளர்கள் சுட்டி காட்டுகின்றனர். கடந்த 2019 வரை முந்தைய 5 ஆண்டுகளில் மட்டும் 2300க்கும் அதிகமான மக்கள் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அரசு தகவல்கள் கூறுகின்றன. அதிலும் அதே கால கட்டத்தில் 500க்கும் மேற்பட்ட யானைகளும் உயிரிழந்துள்ளன. அதில் குறிப்பாக 333 யானைகள் மின்சாரம் தாக்கியும், சுமார் 100 யானைகள் வேட்டையாடப்பட்டும், விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளன என்பது இதன் அவலத்தை நமக்கு தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றன.

பனி, Snow

ஆர்க்டிக் பகுதியில் பனியில் உறைந்திருக்கும் 90 லட்சம் சதுர மைல் பரப்பளவு சுமார் 10 லட்சம் ஆண்டுகள் பழமையானவை. ஆர்க்டிக்கின் பெரும்பகுதி இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. புவி வேகமாக வெப்பமடைந்து ஆர்க்டிக் பனிப்படலம் உருகுவகுதால், அணுக்கழிவுகள், கண்டுபிடிக்கப்படாத வைரஸ்கள், ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்கள் பரவலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நாள்தோறும் 200 உயிரினங்கள் அழிகின்றன

சூழல் மாசு உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 150-200 வகையான தாவரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சூழல் சமநிலை இழப்பால் டைனோசர்கள் அழிந்ததிலிருந்து தற்போது உலகம் எதிர் கொண்டு வரும் சூழல் அச்சுறுத்தல் முன்பை விட அதிகமாகும் என எச்சரிக்கின்றனர்.

புதுமையான வழியில்...

மிச்சிகன் மாநில ஆய்வாளர்கள் கோப்பிரவைடு மெட்டலிடிரன்ஸ் என்றழைக்கப்படும் பாக்டீரியாவில் இருந்து தங்கம் வெளிவருவதை  கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாக்டீரியா தங்கம் உருவாகத் தேவைப்படும். கோல்டு குளோரைடு எனும் ரசாயன பொருட்களை விழுங்கி தங்கத்தை உமிழ்வதாக கண்டறிந்துள்ளனர்.

பூமியை தொடர்ந்து ...

பூமியை அடுத்து உயிரினங்கள் வாழ ஏற்றதாக கருதப்படும் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதிக ஒளி உமிழும் விளக்குகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையையும், அங்கு இருப்பது போன்ற கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட வளிமண்டல சூழலையும் உருவாக்கி உருளைக்கிழங்கை விளையவைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago