முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பேசும் ரோபோக்கள்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் 2 செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களான பாப் மற்றும் அலைஸ் தங்களுக்குள் பேசிக் கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை பேசும் மொழி ஆங்கிலத்தைப்போல தெரிந்தாலும் அவை அர்த்தம் புரியாத வகையிலேயே இருந்ததாம். இந்த மொழி செயற்கை நுண்ணறிவு ரோபோக்களுக்கு மட்டுமே புரியுமாம்.

உலகிலேயே அதிகமான பிரமிடுகள் எந்த நாட்டில் அமைந்துள்ளன?

பிரமிடுகள் என்றாலே நமக்கு நினைவக்கு வருவது எகிப்துதான். பிரமிடுகளும் அதில் வைக்கப்பட்டுள்ள மம்மி எனப்படும் பழங்கால சடலங்களும் உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்துபவையாகும். ஆனால் உலகிலேயே அதிகமாக பிரமிடுகள் உள்ள நாடு எகிப்து என்று நீங்கள் நினைப்பீர்களேயானால்.. அது முற்றிலும் தவறு. அதிகமான பிரமிடுகள் உள்ள நாடு சூடான் தான். எகிப்து நாட்டில் 138 பிரமிடுகள் உள்ளன என்றால் சூடானில் 244 பிரமிடுகள் உள்ளன. சூடான் நாடு நைல் நதி நாகரிகத்துக்கு மிகவும் எடுத்துக்காட்டான நாடாகும். கிபி 1070 தொடங்கி கிமு 350 வரையிலும் குஷார்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்கள்தான் சூடானில் பிரமிடுகளை உருவாக்கினர். எகிப்து பிரமிடுகளின் உயரம் சுமார் 400 அடி என்றால் சூடானில் அவை சுமார் 100 அடி கொண்டவையாக அமைக்கப்பட்டிருந்தன.

ரோபோ டீச்சர்

குழந்தை உருவம் கொண்ட இந்த காஸ்பர் ரோபோ, ஆட்டிசம் என்னும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், மன இருக்கத்தில் இருக்கும் சாதாரண குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கிறது. லண்டனைச் சேர்ந்த பிரபல மருத்துவர் பென் ராபின்ஸ், இந்த ரோபோவை உருவாக்கியுள்ளா‌ர்.

தொட்டால் சாவு : உலகின் கொடிய நச்சு மரம் - மன்சிநீல்

இயற்கை எப்போதும் விந்தைகளால் ஆனது. அதன் புதிர்கள் முடிவற்றதும் கூட. புளோரிடா மற்றும் கரீபியன் கடல் பிரதேசங்களில் காணப்படும் ஒரு வகை ஆப்பிள் மரம் தான் உலகிலேயே மிகக் கொடிய நச்சு மரம் என அறியப்படுகிறது. இம் மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மிகவும் ஆபத்தானது.மன்சிநீல் என்ற இந்த மரத்துக்கு பீச் ஆப்பிள் என்ற பெயரும் உள்ளது. இதன் ஏதேனும் ஒரு பகுதி நம் உடலில் பட்டால் அரிப்பு, சொறி, வீக்கம் ஏற்படும். கண்ணில் பட்டால் அவ்வளவுதான் கண் அவுட். பார்க்க கவர்ச்சியாக இருக்கும் இதன் அழகிய பழத்தை சாப்பிட்டால், சாப்பிட்டவுடனேயே நேரடியாக மேல் உலக  பயணம்தான்.அழகுக்கு பின்தான் ஆபத்து என்பது போல பார்க்க அழகாக காட்சியளிக்கும் இந்த மரம் சுமார் 50 அடி வரை கூட வளரக் கூடியது. இதை பற்றி கொலம்பஸ் கூட தனது குறிப்புகளில் சாவின் சிறிய ஆப்பிள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

புதிய கேமரா

இங்கிலாந்தில் விஞ்ஞானி கேவ் தலிவால் தலைமையிலான குழு உடலை ஊடுருவிப் பார்த்து நோயின் தன்மையை சொல்லும் புதிய கேமராவை கண்டுபிடித்துள்ளது. ‘உடல் உள்ளுறுப்புகளின் தன்மை குறித்து ஆராய எண்டோஸ்கோப் போன்ற சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், எண்டோஸ்கோப்பை உடலுக்குள் செலுத்திய பிறகு, அதன் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து சரியான இடத்துக்கு நகர்த்த எக்ஸ்ரேவைத்தான் நாட வேண்டியுள்ளது. ஆனால், இந்த கேமரா, எண்டோஸ்கோப் இருப்பிடத்தை சரியாக காட்டி விடும். அதற்கான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிலிக்கான் சிப், கேமராவில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இனி எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனுக்கு அவசியம் இல்லை.

வேகம் தேவை

இந்தியா, பணமில்லா பரிமாற்றத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் டிஜிட்டல் பரிமாற்றத்திற்குத் தேவையான இணைய சேவையில் போதிய வேகம் இல்லை. உலக அளவில் இணையதளத்திற்கான வேகத்தில் இந்தியா, 96- வது இடத்தில் உள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்த வேகத்தில் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன. இலங்கை, சீனா, தென் கொரியா, இந்தோனேஷியா, மலேசியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவை விட பலமடங்கு முன்னிலையில் உள்ளன. இணைய வேகத்தில் இந்தியா டவுன்லோட் சேவையில் 96- வது இடத்திலும், பேண்ட்வித் சேவையில் 105- வது இடத்திலும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago