ஜே.பி.நைட் என்பவர் லண்டன் மாநகரில் 1868ஆம் ஆண்டு இப்போக்குவரத்து விளக்குகளைக் கண்டு பிடித்தார். மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் இவ்விளக்குகள் நிறுவப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்நாளில் மோட்டார் வாகனங்கள் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கவில்லை. குதிரையை அல்லது குதிரை பூட்டிய வண்டிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர்.பச்சை, சிகப்பு ஆகிய இரு வண்ணங்கள் மட்டுமே அப்போது பயன்படுத்தப்பட்டு வந்தன. உருளையில் நிரப்பப்பட்ட வாயுவினால்தான் அவ்விளக்குகள் எரிந்து வந்தன; இவ்வமைப்பு அப்போது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.அமெரிக்காவின் மிக்சிகன் நகரில் வாகனப் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகி கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில், காவல் துறையைச்சார்ந்த வில்லியம் பாட்ஸ் என்பவர் இரயில்வே சமிக்கைகளின் அடிப்படையில் போக்குவரத்து விளக்குகளை அமைக்க முயற்சி செய்தார். பச்சை, சிகப்பு, காவி பூசிய மஞ்சள் ஆகிய நிறங்களுடன் கூடிய விளக்குகளை நிறுவி இவர் தமது முயற்சியில் 1920ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1923ஆம் ஆண்டு போக்குவரத்து விளக்குகள் நிறுவப்பட்டன. முதலாவது தானியங்கிப் போக்குவரத்து விளக்கு 1927ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நிறுவப்பட்டது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
தீவிர பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் பரிமாற்றங்களை செய்ய முடியாமல் தவிப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்ட் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூளையில் நினைப்பதை டைப் செய்யும் வகையில் கம்ப்யூட்டரை உருவாக்கி உள்ளனர். இதற்காக மின்சார தாக்குதலால் கை- கால் செயலிழந்த மற்றும் வாய் பேச முடியாத ஒருவரை வைத்து ஆராய்ந்ததில் அவர் மனதில் ஏற்படும் உணர்வை கம்ப்யூட்டர் கிரகித்து அதை டைப் செய்கிறது. இந்த கருவியை தலையின் மேல் பகுதியில் பொருத்திக்கொண்டால் போதும். அது, மூளையில் நடக்கும் அதிர்வுகளை துல்லியமாக கணித்து அவர் பேச வேண்டியதை டைப் செய்து தருகிறது. இது பக்கவாத நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
உலகின் முதல் அணு உலை எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா... அமெரிக்காவில் உள்ள மொன்டானா மாகாணத்தின் வடகிழக்கில் உள்ள பாலைவனப் பகுதியான இடாகோ என்ற இடத்தில் 1951 டிசம்பரில் அமைக்கப்பட்டது. சோதனை ஓட்டமாக இதிலிருந்து அப்போது எடுக்கப்பட்ட மின்சாரத்திலிருந்து வெறும் 200 வாட் பல்புகள் மட்டுமே எரிய பயன்படுத்தப்பட்டன. அதன் பின்னர் வெற்றிகரமாக 1954 இல் உலகின் முதன் அணு உலை ரஷ்யாவில் உள்ள Obninsk APS-1 என்ற இடத்தில் நிறுவப்பட்டது. இதன் மூலம் 5 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் 1955 இல் அருகில் உள்ள ஆர்கோ என்ற சிற்றூருக்கு இதன் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபாரடே நிருவனத்தின் இந்த அதிவேக காருக்கு FF 91 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சக்தி வாய்ந்த 1050 ஹார்ஸ்பவர் என்ற என்ஜின்கள் பொருத்தப்படவுள்ளது. இதனால், இந்த காரானது, 2.40 வினாடிகளில் 0-100கி.மீ. வேகத்தை தொட்டுவிடும். 375 மைல்களை அசத்தலாக இது கடக்க கூடியது. இந்த மாடல் கார்களில் முகம் மூலம் அடையாளம் காணும் (face recognition)ஆப் பொருத்தப்பட்டுள்ளது.
மற்றொரு பறவையின் கூட்டில் தனது முட்டைகளை இட்டு, மற்ற பறவைகள் மூலம் தனது சந்ததியை பாதுகாக்கும் பறவைகளை `பாராசிடிக் பறவைகள்’ என்று அறிவியல் துறையில் அழைக்கின்றனர். அதேபோல, பறவைகளில் இளம் குஞ்சுகளைப் பராமரித்து, வளர்க்கும் வேலையை இன்னொரு பறவையிடம் விட்டுவிடுவனவற்றை Parasitic bird என்றும் அவை சார்ந்து வாழ்கின்ற பறவையை Host bird என்றும் அழைக்கின்றனர். அதற்கு நம் கண்முன்னே இருக்கின்ற சிறந்த உதாரணம் காக்கையும் குயிலும். குயில் காக்கையின் கூட்டில் முட்டையிட்டு விடுகின்றது. முட்டையுடைய நிறம் மற்றும் வடிவத்தில், காகத்தின் முட்டையோடு குயிலுடையதும் ஒத்திருக்கும். அதே போல அக்கா குயில் (common hawk cuckoo) என்றழைக்கப்படும் ஒருவகைக் குயில் இனம், தவிட்டுக் குருவியின் கூட்டில் முட்டையிடும்.சுடலைக் குயில் (pied cuckoo) என்றழைக்கப்படும் ஒருவகைக் குயில் இனம், சின்னான் வகையைச் சேர்ந்த கேப் புல்புல் (cape bulbul) என்ற பறவையின் கூட்டில் முட்டையிடும். ஆனால், அதன் முட்டையும் சின்னானுடைய முட்டையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இருந்தாலும், அதைச் சின்னான் தவிர்க்காமல், அடைகாத்து தன்னுடைய குஞ்சுகளைப் போலவே கவனித்துக் கொள்கின்றன.இப்படி, தன் இனத்தைப் பெருக்கிக்கொள்வதற்காக குயில்கள் காகங்களைச் சார்ந்திருக்கின்றன. அவற்றிடமிருந்து தன் முட்டைகளைக் காப்பாற்ற, காக்கைகள் குயில்களிடம் போராடுகின்றன. இரண்டின் போராட்டத்திற்கும் வெற்றி கிடைக்கின்றது. இறுதியில் இரண்டுமே தம் இனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன.
2050-ம் ஆண்டில் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. 1964-ம் ஆண்டில் தொடங்கிய பிளாஸ்டிக் பயன்பாடு, 2014-ம் ஆண்டில் 311 மில்லியன் டன் (31 கோடி டன்) ஆகிவிட்டது. தற்போது, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கடலில் கலக்கின்றன. இது தொடருமானால், வருகிற 2050-ம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் அதிக அளவில் மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 14 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதை 70 சதவீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
25 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு இ
-
தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
25 Nov 2024சென்னை, தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள
-
ஐ.பி.எல். மெகா ஏலம் 2-வது நாள்: சாம் கர்ரண் ரூ.2.40 கோடி ஏலம்; குருனால் ரூ.5.75 கோடிக்கு ஏலம்
25 Nov 2024ஜெட்டா : ஐ.பி.எல். தொடரின் 2-ம் நாள் மெகா ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்றது. இதில் சாம் கர்ரணை ரூ.2.40 கோடி ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
-
சோமாலியாவை சேர்ந்த 24 பேர் கடலில் மூழ்கி பலி
25 Nov 2024மொகதிசு, கடலில் படகுகள் மூழ்கி விபத்தில் சோமாலியாவை சேர்ந்த 24 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
கடலூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு: பொதுமக்களின் நண்பர்களாக காவலர்கள் செயல்பட வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
25 Nov 2024கடலூர், கடலூர் மாவட்டம் முதுநகர் காவல் நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
-
ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்பு மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியின் பெயர் மாற்றம் : அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை
25 Nov 2024நாமக்கல் : ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் 'அரிசன் காலனி’ என்ற பெயரை அமைச்சர் அன்பில் மகேஷ் அழித்தார்.
-
அதானி நன்கொடை: தெலுங்கானா முதல்வர் நிராகரிப்பு
25 Nov 2024ஐதராபாத், அதானி வழங்க முன்வந்த நன்கொடை பணத்தை வேண்டாமென தெலங்கானா முதல்வர் நிராகரித்துள்ளார்.
-
பெர்த் முதல் டெஸ்ட்போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
25 Nov 2024பெர்த் : பெர்த் முதல் டெஸ்ட்போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்ற
-
ஜார்க்கண்டில் இருவர் சுட்டுக்கொலை
25 Nov 2024ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
-
அதி கனமழை எச்சரிக்கை: நாகை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
25 Nov 2024நாகை, நாகை மாவட்டத்திற்கு இன்று (நவ. 26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
-
மனிதனை மையப்படுத்தும் ஏ.ஐ. மையம்: சென்னை ஐ.ஐ.டி. தகவல்
25 Nov 2024சென்னை, ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் என்ற ‘மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது.
-
ரோகித் சர்மா இணைந்தார்
25 Nov 2024இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆடி வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2024.
26 Nov 2024 -
கடலூரில் அண்ணா ஸ்டேடியத்தில் 15.08 கோடி ரூபாயில் செயற்கை இழை தடகள ஓடுதளப் பாதை: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
25 Nov 2024கடலூர், கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ரூ.15.08 கோடி மதிப்பில் செயற்கை இழையிலான தடகள ஓடுதளப் பாதை அமைக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் த