ஆள் அரவமற்ற அமைதியாக பென்குயின்கள் மத்தியில் வேலை செய்ய விரும்புகிறீர்களா.. அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் அண்டார்டிகாவில் உள்ள பிரிட்டன் அறக்கட்டளைக்கு சொந்தமான போர்ட் லாக்ராய் என்ற இடத்திலுள்ள தபால் அலுவலகத்துக்கு தான். இந்த அலுவலகம் 1944 இல் பிரிட்டன் தன்னார்வ அறக்கட்டளையால் உருவாக்கப்பட்டு 1962 வரை தபால் அலுவலகமாக செயல்பட்டு வந்தது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வீடுகளுக்கு எழுத விரும்பும் கடிதங்களை தயார் செய்து அனுப்பும் பணியை மேற்கொண்டது. ஆள் இல்லாத காலங்களில் பென்குயின் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டது. தற்போது யார் கடிதம் அனுப்புறா.. எனவே தபால்களை எண்ணுவதற்கு பதிலாக பென்குயின்களை எண்ணும் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது. என்ன நீங்க ரெடியா..
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ரஃப்ரீ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய மாடல் ஸ்மார்ட் போனை சோப்பு போட்டு கழுவி சுத்தப்படுத்தலாம். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோசெரா என்ற நிறுவனம் இந்த புதிய வகை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. சூடான தண்ணீரில் கூட ஸ்மார்ட் போனை சுத்தபடுத்தலாம். இந்த மொபைல் நௌவ்கட் இயங்கு தளத்தில் இயங்கும்.
உலக அளவில் அதிக பேஸ்புக் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் மொத்தம் 24.1 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் அந்த எண்ணிக்கை 24 கோடிதான். கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டார்களின் எண்ணிக்கை 5 கோடி அதிகரித்துள்ளதாம்.
உலகின் அதிவேக போர் விமானங்களில் முதல் இடத்தில் நார்த் அமெரிக்கன் எக்ஸ்-15. உலகின் அதிவேக போர் விமான மாடல் இதுதான். அதிகபட்ச வேகம் - மேக் 6.72 . இரண்டு ராக்கெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்ட போர் விமான மாடல். 2-வது இடத்தில் லாக்ஹீட் எஸ்ஆர்71 பிளாக்பேர்டு. அதிகபட்ச வேகம் - மேக் 3.0+ இதுவும் லாக்ஹீட் ஏ12 உளவு விமானத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. மொத்தமே 32 பிளாக்பேர்டு விமானங்களை தயாரிக்கப்பட்டன. 3-வது இடத்தில் லாக்ஹீட் ஒய்எஃப்-12. அதிகபட்ச வேகம் - மேக் 3.0. எதிரி விமானங்களை இடைமறித்துதாக்கும் தாக்கும் ரகத்தை சேர்ந்தது. அமெரிக்க விமானப்படையில் பயன்பாட்டில் உள்ளது. 74,000 அடி உயரத்தில் மேக் 3.2 வேகத்தில் பறக்கும்.மொத்தமே மூன்று விமானங்கள்தான் தயாரிக்கப்பட்டன.
தேளில் இருந்து விஷம் பிரித்து எடுக்கும் புதிய ‘ரோபோ’: விஞ்ஞானிகள் தயாரித்தனர். தேளின் விஷத்தில் மருத்துவ குணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது உயிர்காக்கும் மருந்துகளில் கலக்கப்படுகிறது. தற்போது, தேள்களிடம் இருந்து விஷத்தை பிரித்து எடுக்கும் ‘ரோபோ’க்களை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது மிகவும் எடை குறைவானது. சிறிய அளவிலும் உள்ளது. இந்த ‘ரோபோ’ தேளில் இருந்து விரைவாகவும், பாதுகாப்பாகவும் விஷத்தை பிரித்து எடுக்கின்றன.தேளிடம் இருந்து விஷத்தை பிரித்து எடுப்பது மிகவும் கஷ்டமானது. இறந்த தேள்களின் கொடுக்குகளில் இருந்து மின்சார அதிர்ச்சி மூலம் விஷம் பிரித்தெடுக்கப்படுகிறது. தேளில் இருந்து விஷத்தை பிரித்து எடுக்கும் ‘ரோபோ’வை விஞ்ஞானி மொயுத் மிகாமல் கண்டு பிடித்துள்ளார். அதற்கு ‘வெஸ்ட்-4’ என பெயரிட்டுள்ளார். இந்த ரோபோ மிக சிறியதாக இருப்பதால் ஆய்வகம் அல்லது வெளியிடங்களில் வைத்து பணியாற்ற முடியும்.
பருவ நிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்றவற்றால் பூமி சுனாமி, சூறாவளி மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு உட்படுமாம். படிப்படியாக இதுபோன்ற அழிவுகளால் பூமி, 2100 ம் ஆண்டிற்குள் முற்றிலும் அழிவை சந்திக்கும் என மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முதலில் கடல் இனங்கள் 95 சதவிகிதம் அழியும். இதைதொடர்ந்து, மற்ற இடங்களுக்கு பேரழிவு தொடருமாம். இதுவரை ஆர்டோவிசினியன், டெவோனியன், பெர்மியன் - ட்ராயாசிக், ஜூராஸிக், க்ரட்டாசியஸ் எனப்படும் 5 காலகட்டங்களில், உலகில் உள்ள உயிர்கள் 5 பேரழிவுகளைச் சந்தித்தது. இதற்கு இணையான ஒரு பேரழிவு வரும் 2100ம் ஆண்டுக்குள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
25 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு இ
-
தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
25 Nov 2024சென்னை, தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள
-
ஐ.பி.எல். மெகா ஏலம் 2-வது நாள்: சாம் கர்ரண் ரூ.2.40 கோடி ஏலம்; குருனால் ரூ.5.75 கோடிக்கு ஏலம்
25 Nov 2024ஜெட்டா : ஐ.பி.எல். தொடரின் 2-ம் நாள் மெகா ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்றது. இதில் சாம் கர்ரணை ரூ.2.40 கோடி ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
-
சோமாலியாவை சேர்ந்த 24 பேர் கடலில் மூழ்கி பலி
25 Nov 2024மொகதிசு, கடலில் படகுகள் மூழ்கி விபத்தில் சோமாலியாவை சேர்ந்த 24 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
கடலூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு: பொதுமக்களின் நண்பர்களாக காவலர்கள் செயல்பட வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
25 Nov 2024கடலூர், கடலூர் மாவட்டம் முதுநகர் காவல் நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
-
ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்பு மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியின் பெயர் மாற்றம் : அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை
25 Nov 2024நாமக்கல் : ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் 'அரிசன் காலனி’ என்ற பெயரை அமைச்சர் அன்பில் மகேஷ் அழித்தார்.
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
அதானி நன்கொடை: தெலுங்கானா முதல்வர் நிராகரிப்பு
25 Nov 2024ஐதராபாத், அதானி வழங்க முன்வந்த நன்கொடை பணத்தை வேண்டாமென தெலங்கானா முதல்வர் நிராகரித்துள்ளார்.
-
பெர்த் முதல் டெஸ்ட்போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
25 Nov 2024பெர்த் : பெர்த் முதல் டெஸ்ட்போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்ற
-
ஜார்க்கண்டில் இருவர் சுட்டுக்கொலை
25 Nov 2024ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
-
அதி கனமழை எச்சரிக்கை: நாகை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
25 Nov 2024நாகை, நாகை மாவட்டத்திற்கு இன்று (நவ. 26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.