முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

யோகா நித்ரா

யாரெல்லாம் தூக்கத்தை தொலைக்கிறார்களோ அவர்களுக்கு யோகா நித்ரா ஆசனம்  உதவும். 20 நிமிடங்கள் இந்த ஆசனத்தை செய்தால் 2 மணி நேரம் அதிகமான தூக்கத்தை பெறலாம்.  ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள். வயோதிகம் கட்டுப்படுத்தப்படும். சக்தி அதிகரிக்கும்.

சமண படுகைகளைப்போல மலை உச்சியில் பாறைகளை குடைந்து வீடு கட்டி வசிப்பவர்கள்

தென்னிந்தியா முழுவதும் உள்ள எந்த மலைக்கும், குன்றுக்கும் சென்றாலும் அங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சமணத் துறவிகளால் உருவாக்கப்பட்ட குடை வரை சிற்பங்களையும், கோயில்களையும், படுக்கைகளையும் காண முடியும். இன்றைக்கும் தொல்லியல் துறையின் மிகப் பெரிய ஆச்சரியங்களில் ஒன்றாக நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அவை தாங்கி நிற்கின்றன. ஆனால் இன்றைய நவீன யுகத்தில் அப்படி யாராவது மலை உச்சியில் பாறையை குடைந்து குடை வரை குடியிருப்பை அமைப்பார்களா என்றால்... ஆம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். ஆனால் அது நடந்துள்ளது இங்கு அல்ல. இத்தாலியில். அந்நாட்டில் உள்ள Dolomites Mountains என்ற மலையில்தான் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2700 மீட்டர் அதாவது 8 ஆயிரத்து 858 அடி உயரத்தில் பாறையை குடைந்து தன்னந்தனிமையில் ஒருவர் வீட்டை உருவாக்கியுள்ளனர். முதலாம் உலகப் போரின் போது இத்தாலியர்களுக்கும் ஆஸ்திரோ ஹங்கேரியர்களுக்கும் சண்டை வந்த போது அதிலிருந்து தப்ப விரும்பிய சிலர் இது போன்று யாரும் எளிதில் வரமுடியாத இந்த இடத்தில் வீட்டை உருவாக்கினர். தொலைவிலிருந்து பார்க்கும் போது பாறையில் ஒட்டியிருப்பது போல தோன்றும் இந்த வீடு தற்போது பாரம்பரிய சுற்றலா தளத்தில் இடம் பெற்றுள்ளது. மிகவும் ஆச்சரியமும் வியப்பும் அளிக்கும் செய்தியாக இது உலகுக்கு தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களை போல...

குரங்களால் மனிதர்களைப் போல பேசவும், சிரிக்கவும் முடியாது. ஆனால், மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மனிதர்களைப் போலவே குரல் வளை உள்ளிட்ட குரல் எழுப்பும் உறுப்புகள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஒலி சைகைகளை குரலாக மாற்றும் அளவுக்கு இவைகளுக்கு மூளை வளர்ச்சியடையவில்லையாம்.

ஹோலி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

பொதுவாக ஹோலி பண்டிகை என்றாலே வட மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றுதான் நாம் அனைவரும் கருதுகிறோம். ஆனால் அது தவறு.. ஹோலி பண்டிகை இந்தியா முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் கொண்டாடப்படுவதுடன் பிற ஆசிய நாடுகளிலும், தற்போது உலக நாடுகளிலும் கூட ஹோலி கொண்டாடப்படுகிறது. ஹோலியின் போது வண்ணப் பொடிகளை தூவி கொண்டாடுவது வடநாட்டு ஸ்டைல். மஞ்சள் குளித்து கொண்டாடுவது கேரள ஸ்டைல், பால்குடம் எடுத்து பங்குனி உத்திரம் என கொண்டாடுவது தமிழகத்து ஸ்டைல். எப்படியானாலும் குளிர்காலம் முடிந்து வசந்தம் தொடங்குவதை அறிவிக்கும் விதமாக பங்குனி (அல்லது பால்குன) மாதத்தின் பவுர்ணமி தினத்தன்று கொண்டாடுவதுதான் ஹோலி. மேலும் இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. ரண்ய கசிபுவை விஷ்ணு நரசிம்ம அவதாரத்தில் வந்து வெற்றி கொண்ட நாளாகவும் ஒரு தரப்பினரால் கொண்டாடப்படுகிறது.

ஆர்வத்தை தூண்டும்

குழந்தைகளுக்கான உணவைத் தயாரிக்கும்போது அவர்களைக் கவரும் விதத்தில் உணவைத் தயாரிக்க வேண்டும். வெவ்வேறு வடிவங்களில் தோசை சுடலாம். வழக்கமான இட்லிக்குப் பதில், சிவப்பு அரிசி, கேழ்வரகு இட்லி என வெவ்வேறு நிறங்களில் உள்ள காய்கறிகள் சேர்த்து வித்தியாசமாகக் கொடுக்க அவர்கள் விரும்பி உண்ணுவர்.

கிரீன் டி மகிமை

கிரீன் டீ உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்தையும், அழகையும் அதிகரிக்க உதவும். இதற்கு கிரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன்கள் போன்றவை தான் முக்கிய காரணம். இவைகள் தான் ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago