முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சுற்றுலாவுக்கு ஏற்ற இடம்

உலகின் சிறந்த சுற்றுலா தலங்களில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் டாப்-10 நகரங்களில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகளவில் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தேர்வான 43 சுற்றுலா தலங்களில் 10-வது இடத்தையும் ஆசியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் 3-வது இடத்தையும் ஜோத்பூர் நகரம் பிடித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரம் அழகிய அரண்மனைகள், கோட்டைகள், பிரமாண்ட மாளிகைகள் போன்றவற்றிற்கு சொந்தமானது. இதனால் இந்தியாவின் சிறந்த சுற்றுலா மையமாக ஜோத்பூர் விளங்குகின்றது.

கால்சியம் சத்து

உடலில் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை தடுக்க பால் பருகி வருவதன் மூலம் கால்சியம் சத்தை தக்கவைத்து அதை தடுக்கலாம். சோயா பாலில் பாலை விட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 100 மி.லி. சோயா பாலில் 120 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. பாதாமிலும் 80 சதவீதம் அளவுக்கு கால்சியம் நிறைந்துள்ளது. தினமும் 5-6 பாதாம்களை சாப்பிட்டு வருவது கால்சியம் சத்து அதிகரிக்க உதவும்.

3Dபிரிண்டர் மூலம் எருது இறைச்சி ஜப்பானிய விஞ்ஞானிகள் அசத்தல்

இன்றைக்கு வெகு வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் 3D பிரிண்டர் துறையும் ஒன்று. ஒரு பொருளை தொழில் நுட்பத்தின் உதவியுடன் அப்படியே ஒட்டு மொத்தமாக உருவாக்க உதவும் கருவியை 3டி பிரிண்டர் என்று சுருக்கமாக சொல்லலாம். இந்த 3டி பிரிண்டர் மூலம் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்பட்டு வரும் வேளையில் முக்கியமாக ஜப்பானைச் சோ்ந்த ஒசாகா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் செயற்கையாக எருது இறைச்சியை உருவாக்கி அசத்தியுள்ளனர். செயற்கை ரத்தம், தசை, திசு, போன்ற சிக்கலான அமைப்புடன் கூடிய இந்த இறைச்சி உருவாக்கம் ஒரு முன்னோடி கண்டுபிடிப்பாக நிகழ்ந்துள்ளது. Wagyu cows என்று அழைக்கப்படும் பசுமாடுகளின் ஸ்டெம் செல்லிலிருந்து இது போன்ற செயற்கை இறைச்சியை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை இறைச்சி 5 மீமி அகலம் 10 மிமீ நீளம் கொண்டதாக உள்ளது. இதில் 72 பைபர்களை இணைத்து 42 திசுக்களாக உருமாற்றி, மேலும் 28 கொழுப்பு கொண்ட திசுக்களையும், 2 ரத்த தமனிகளையும் உருவாக்கியுள்ளனர். இவை அப்படியே இயற்கை இறைச்சியை போலவே காட்சியளிக்கின்றன. இது குறித்து இக்குழுவின் தலைவர் டாங் ஹீ கங் கூறுகையில், வாக்யூ மாட்டிறைச்சியின் திசுக்களின் கூட்டமைப்பை வரைபடமாகக் கொண்டு தசைநார்கள், கொழுப்பு மற்றும் ரத்த நாளங்கள் கொண்ட சிக்கலான வடிவமைப்பை 3டி பிரிண்டரை கொண்டு உருவாக்கியுள்ளோம் என்றார். இவ்வகை மாட்டிறைச்சிக்கு உலக சந்தையில் உணவு பிரியர்களிடம் ஏக கிராக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் போனும் கையுமாக..

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், காலை தூங்கி எழுந்தவுடன் முதல் ஐந்து நிமிடங்களில் ஸ்மார்ட் போனை தேடி எடுத்து விடுவதாக 61 சதவீதத்தினரும், முதல் அரை மணி நேரத்தில் ஸ்மார்ட்போனை எடுத்துவிடுவதாக 88 சதவீதத்தினரும், 96 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் ஒரு மணி நேரத்துக்குள் மொபைலை எடுத்துவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இதேபோல், 74 சதவீதம் பேர், இரவு தூங்கச் செல்வதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. 53,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருளில் ஒளிரும் மனித உடல்

இருளில் மனித உடல் ஒளிரும் என்பது உங்களுக்கு தெரியுமா.. ஒரு நாளில் மிக குறைந்த அளவிலோ, மிக அதிகமாகவோ உடல் ஒளிர்கிறது. ஆனால் அதை நாம் வெறும் கண்ணால் பார்க்க இயலாது. அது வெளியிடும் ஒளியின் அளவானது நமது கண்கள் உணரும் திறனை விட 1000 மடங்கு குறைவானதாகும். ஆனால் இந்த ஒளியானது அகச்சிவப்பு கதிர்களிலிருந்து மாறுபட்டது. அது உடலின் வெப்பத்திலிருந்து வெளிப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு ஒளி உமிழும் உடலின் திறனானது காலை 10 மணி அளவில் மிக குறைவாகவும், மாலை 4 மணி அளவில் உச்சத்திலும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முற்றிலும் ஒளியற்ற அரையில் ஆரோக்கியமான நபர்களை நிறுத்தி வைத்து குறைவான ஒளியில் படம் பிடிக்கும் கேமராவை கொண்டு விஞ்ஞானிகள் இதை படம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திரங்களை விட மரங்களின் எண்ணிக்கை அதிகம்

கேட்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். நாம் அனைவருக்கும் தெரியும் இந்த பிரபஞ்சத்திலேயே உயிரினங்கள் வாழக்கூடிய ஒரே கிரகம் பூமிதான். அது சரி. அதை விட ஆச்சரியம் என்னவென்றால் மில்கிவே என அழைக்கப்படும் கேலக்ஜியில் உள்ள நட்சத்திரங்களை காட்டிலும் பூமியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை அதிகம் என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். 20215 இல் நேச்சர் இதழில் வெளியான ஆய்வு ஒன்றில் கூறப்பட்டிருந்த தகவலின்படி மில்கிவேயில் சுமார் 100 முதல் 400 மில்லியன் வரைதான் நட்சத்திரங்கள் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் பூமியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாம். அதாவது 3.04 ட்ரியல்லியன் என்கிறது அந்த ஆய்வு. ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago