முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டோர் டெலிவரி

உணவு விற்பனை செயலியான எல்ப் ஈட் 24 நிறுவனமும் மார்பிள் ரோபோ நிறுவனமும் இணைந்து தானியங்கி ரோபோக்களை வடிவமைத்துள்ளனர். சாப்பாடு ஆர்டர் செய்தால் இந்த ரோபோக்கள் வீட்டுக் கதவைத் தட்டி சேர்த்துவிடுமாம். சான் பிரான்ஸிஸ்கோவின் சில பகுதி உணவுவிடுதிகள் உணவை சப்ளை செய்ய இந்த ரோபோக்களை பயன்படுத்துகின்றனர். இவை, சென்சார் கேமரா மற்றும் அல்ட்ராசோனிக் தொழில்நுட்ப உதவியுடன் சாலைகளில் பயணிக்கும். வழியில் எதிர்படும் மனிதர்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்தையும் இவற்றால் உணர முடியுமாம். இந்த தானியங்கி ரோபோக்களின் செயற்பாடுகளை தொடர்ந்து ஹோட்டலின் உரிமையாளர்கள் கண்காணித்து கொண்டே இருப்பார்களாம். இதனால் உணவை எடுத்து செல்ல எந்தச் சிக்கலும் இருக்காதாம்.

மேலும் வசதி

விபத்தை தவிர்க்கும் வகையில், தானாக இயங்கக்கூடிய ஸ்கூட்டரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஒரு நபர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த ஸ்கூட்டரில் நான்கு சக்கரம் உள்ளது.இதன் எடை 50 கிலோ ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ஸ்கூட்டர் பயணிக்கும் போது இடையூறுகள் வந்தால் அதனை கண்டறிவதற்காக இதில் சென்சார்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.

ரோபோ டீச்சர்

குழந்தை உருவம் கொண்ட இந்த காஸ்பர் ரோபோ, ஆட்டிசம் என்னும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், மன இருக்கத்தில் இருக்கும் சாதாரண குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கிறது. லண்டனைச் சேர்ந்த பிரபல மருத்துவர் பென் ராபின்ஸ், இந்த ரோபோவை உருவாக்கியுள்ளா‌ர்.

’ப்ளூ வேல்’ கேம்

உலக அளவில் பிரபலமாக வரும் ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம் 50 நாட்களுக்கு கொடுக்கப்படும். ஆரம்பத்தில் சவால்கள் எளிதாகவே இருக்கும். ஆனால், போகப்போக சவால்கள் கடினமாக்கப்படும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற சவால் விடுக்கப்படும். இந்த விளையாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்களை நிஜ உலகத்துடனான தொடர்பை இழக்க செய்து, விர்ச்சுவல் எனப்படும் மாய உலகத்துக்குள் அழைத்துச் சென்று தற்கொலை செய்யத் தூண்டுவதுதான் இதன்  நோக்கம். இந்த விளையாட்டை வடிவமைத்த ரஷ்யாவின் பிலிப் புடேய்கின் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மணல், sand

பீச்சுக்குப் போனால் மணலில் உட்கார்ந்து மணல் வீடு செய்வோம், மணலில் குழி பறித்து விளையாடுவோம் இல்லையா? இப்படி விளையாடும்போது கடற்கரையில் இவ்வளவு மணல் எப்படி வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா..  கடற்கரையில் மணல் நிரம்பிக் கிடக்க அலைகளே காரணம். அலைகள் எப்போதும் கரையை ஓங்கி அறைந்த படி கரையில் உள்ள கற்களையெல்லம் அரித்துக் கொண்டே இருக்கின்றன. சிறு சிறு கற்களை ஒன்றோடு ஒன்று அலைகள் மோத வைக்கின்றன. இப்படிக் கற்கள் மோதிக்கொள்ளும் போது மாவரைக்கும் இயந்திரத்தில் அரைபடுவது போலக் கற்கள் அரைபட்டு கடல் மணல் உருவாகிறது.

ஏலம் போனது

2-ம் உலகப்போரின் போது எத்தனையோ உயிர்களை கொல்ல ஆணையிட்ட சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி 1945-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஒரு பாதுகாப்பு கிடங்கு அறையில் கண்டு பிடிக்கப்பட்டது. இது தற்போது ரூ.1 கோடியே 68 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago