உலகின் மிகப் பெரிய குடும்பம் எங்குள்ளது தெரியுமா..இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள பக்த்வாங் என்ற ஊரில் இருக்கும் சியோனா சனா என்பவரின் குடும்பம் தான் உலகிலேயே மிகப்பெரிய குடும்பமாகும். சியோனா சானாவுக்கு மொத்தம் 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற வியக்கத்தக்க உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். இவர்கள் அனைவரும் 100 அறைகள் கொண்ட ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். சியோனா சனா கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் தெரியும் விமானத்தை கண்டு பிடித்தது ரைட் சகோதரர்கள்தான் என்று. அவர்களது முதலாவது வான் பயணம் 1903இல் அமெரிக்காவிலுள்ள கிட்டி ஹாக் என்னுமிடத்தில் நடைபெற்றது. ஆனால் யாருக்கும் தெரியாது அவருக்கு முன்பே 1895 லேயே இந்தியர் ஒருவர் விமானத்தை கண்டு பிடித்து, அதை பறக்கவும் விட்டுள்ளார். ஆனால் அங்கீகாரம் பெறாத அந்த மேதையின் பெயர் ஷிவ்கார் பாபுஜி தல்படே. மும்பையில் 1864 இல் பிறந்த அவர், அப்போதே சமஸ்கிருத இலக்கியங்களில் வித்தகராக விளங்கினார். அவர் ஆள் இல்லாத விமானத்தை மும்பையில் உள்ள சவ்பாத்தி பீச்சில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பறக்க விட்டுள்ளார். சமஸ்கிருத இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள விமானங்கள் குறித்து பண்டைய சாஸ்திரங்களை கற்று அதே போன்ற ஒரு விமானத்தை இவர் உருவாக்கியுள்ளார். மூங்கில் வடிவிலான அது பாதரசம் அல்லது யூரியா மூலம் இயக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பரோடா மன்னர் சகஜியா கெய்க்வாட், மகாதேவ் கோவிந்த ஆரோன் ராய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவரது விமானம் சுமார் 1500 அடி வரை பறந்து சென்று சிறிது நேரத்தில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஆனால் அவரது முயற்சிக்கு அப்போதைய ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. பாதரசத்தை வைத்து வெடி பொருள் தயாரித்ததாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் விடுதலை ஆகி வெளியில் வந்த போது ரைட் சகோதரர்களின் விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது.
ஆம், அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், மிக சிறந்த ஜனநாயகவாதியுமான ஆபிரகாம் லிங்கன் அரசியல்வாதியாக ஆவதற்கு முன்பாக குத்து சண்டை வீரராக திகழ்ந்தார். அவர் 300க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கு பெற்றுள்ளார். ஒரே ஒரு முறை மட்டுமே வெற்றி பெற வாய்ப்பிருந்தும் அவரது உயரம் காரணமாக பந்தயத்தில் தோற்றார். அவரது உயரம் 6 அடி 4 அங்குலம். அவர் மிக சிறந்த தந்்திரங்களை கையாண்டு வெற்றியை ஈட்டினார். இதனால் அமெரிக்காவின் ஈடு இணையற்ற வீரர் என புகழப்பெற்றார்.
தாளாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும். நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும்.
‘ராஸ்பெர்ரி பை’ என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கணினி ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டு, நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியக்கூடிய ‘ராஸ்பெர்ரி ஷேக் 4டி’ என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர். நிலநடுக்கத்தின்போது உருவாகும் கண்ணுக்குத் தெரியாத அசைவுகளைப் பார்ப்பதற்கும் இது உதவுகிறது. இதனால் நிலநடுக்கம் ஏற்படுவதை முன்பே நாம் கணிக்க முடியுமாம்.
இன்றைக்கு தகவல் பரிமாற்ற தொழில் நுட்பம் தொலைபேசி, அலைபேசி, இமெயில், எஸ்எம்எஸ், என்று படிப்படியாக வானளாவிய அளவில் வளர்ந்து விட்டது. ஆம் உண்மையிலேயே வானத்துக்கு சென்று விட்டது. செயற்கை கோள்கள் மூலம் தகவல் பரிமாற்ற காலத்தை அடைந்துள்ளோம். ஆனால் தொடக்கத்தில் டெலிகிராஃப் எனப்படும் தந்தி என்ற முறையில் செய்திகளை அனுப்பினோம். இதை அமெரிக்காவில் உள்ள ஓவியர் சாமுவேல் மோர்ஸ் என்பவர் 1837 இல் கண்டுபிடித்தார். எனவே தந்திக்கு மோர்ஸ் தந்தி என்ற பெயர் வந்தது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு முதல் தந்தி 1838 ஜனவரி 11-ஆம் தேதி அனுப்பப்பட்டது. பொதுமக்களுக்கான முதல் தந்தி சேவையை பிரிட்டன் 1846 இல் நிறுவியது. இந்தியாவில் 1850 இல் சோதனை முறையில் கொல்கத்தாவுக்கும் டயமண்ட் துறைமுகத்துக்கும் இடையே நிறுவப்பட்டது. இதன் பின்னர் 1851 இல் கிழக்கிந்திய கம்பெனி இதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. 1902 இல் முதன்முறையாக கம்பியில்லா தந்தி முறை அறிமுகமானது. செல்பேசிகள், இ-மெயில் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இந்தியாவில் தந்தி சேவை பயன்பாடு முற்றிலுமாக நின்றுவிட்டது. 2009-10-ஆம் ஆண்டுகளில் தந்தி சேவை பயன்பாடு 100 சதவீதம் குறைந்துவிட்டது. இதையடுத்து 2013 ஜூலை 15 முதல் இந்தியாவில் தந்தி சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
25 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு இ
-
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
25 Nov 2024சென்னை, தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள
-
சோமாலியாவை சேர்ந்த 24 பேர் கடலில் மூழ்கி பலி
25 Nov 2024மொகதிசு, கடலில் படகுகள் மூழ்கி விபத்தில் சோமாலியாவை சேர்ந்த 24 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
ஐ.பி.எல். மெகா ஏலம் 2-வது நாள்: சாம் கர்ரண் ரூ.2.40 கோடி ஏலம்; குருனால் ரூ.5.75 கோடிக்கு ஏலம்
25 Nov 2024ஜெட்டா : ஐ.பி.எல். தொடரின் 2-ம் நாள் மெகா ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்றது. இதில் சாம் கர்ரணை ரூ.2.40 கோடி ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
-
கடலூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு: பொதுமக்களின் நண்பர்களாக காவலர்கள் செயல்பட வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
25 Nov 2024கடலூர், கடலூர் மாவட்டம் முதுநகர் காவல் நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
-
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்பு மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியின் பெயர் மாற்றம் : அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை
25 Nov 2024நாமக்கல் : ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் 'அரிசன் காலனி’ என்ற பெயரை அமைச்சர் அன்பில் மகேஷ் அழித்தார்.