முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கிரிஸ்பி பிரட் எக் ரோல்

Cooking time in minutes: 
20
Ingredients: 

கிரிஸ்பி பிரட் எக் ரோல் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. பிரட் துண்டுகள் - 8.
  2. முட்டை – 3.
  3. பூண்டுப்பொடி - 1/2 ஸ்பூன்.
  4. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1.
  5. கறிவேப்பிலை,மல்லி ,புதினா, -  சிறிதளவு.
  6. பொடியாக நறுக்கிய  பச்சை மிளகாய் - 3.
  7. இஞ்சி பொடி - 1/2 ஸ்பூன்.
  8. சாட் மசாலா - ஒரு ஸ்பூன்.
  9. மிளகுத்தூள்  - 1/2 ஸ்பூன்.
  10. கடலை மாவு - 300 கிராம்.
  11. காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்.
  12. சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்.
  13. பிரட் கிராம்ஸ்  - சிறிதளவு. 
  14. சிகப்பு கலர் பொடி – சிறிதளவு. (தேவைப்பட்டால்) 
  15. எண்ணெய்  - 1/2 லிட்டர்.
  16. உப்பு - தேவையான அளவு.
Method: 

 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 8 பீஸ் பிரட்டை போட்டு தண்ணீரில் ஊற வைத்து பின்னர்  பிரட்டை பிழிந்து தண்ணீரை நீக்கி விட்டு பிரட்டை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. இதனுடன் வேக வைத்து சுத்தம் செய்த 3 முட்டையை எடுத்து  துருவி போட்டுக் கொள்ளவும்.
  3. இதனுடன் 1/2 ஸ்பூன் பூண்டுப்பொடி,தேவையான அளவு உப்பு,பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்,பொடியாக நறுக்கிய சிறிதளவு கறிவேப்பிலை,மல்லி மற்றும் புதினா போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. இதனுடன் பொடியாக நறுக்கிய 3 பச்சை மிளகாய்,1/2 ஸ்பூன் இஞ்சி பொடி,ஒரு ஸ்பூன் சாட் மசாலா,1/2 ஸ்பூன் மிளகுத்தூள், 300 கிராம் கடலை மாவு,1/2 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள், 1/2 ஸ்பூன் சீரகத்தூள் போட்டு நன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும்.
  5. இந்த மாவு கலவையில்  இருந்து சிறிதளவு மாவை எடுத்து நீளமாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  6. இதை போல எல்லா மாவையும் உருட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. ஒரு தட்டில் சிறிதளவு பிரட் கிராம்ஸ்சை  எடுத்துக் கொள்ளவும்.
  8. தேவைப்பட்டால் சிறிதளவு சிகப்பு கலர் பொடியை பிரட் கிராம்சில் போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  9. நீளமாக உருட்டி வைத்துள்ள மாவை பிரட் கிராம்சில் போட்டு பிரட் கிராம்ஸ் மாவின் எல்லா பக்கங்களிலும் ஓட்டும் படி  பிரட்டி எடுத்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  10. அடுப்பில் கடாயை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  11. எண்ணெய் சூடானவுடன் பிரட் கிராம்சில் பிரட்டி எடுத்து வைத்துள்ள மாவை போட்டு நன்றாக பொரிக்கவும்.
  12. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  13. சுவையான கிரிஸ்பி பிரட் எக் ரோல் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 16 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 16 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 14 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 14 hours ago